சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது. காற்றும் அடித்தது. பொங்கோலில் ஒரு பெரிய மரம் ஒரு காரின் மீது விழுந்து, 10 செ.மீ. அளவுக்கு விட்டம் உள்ள அதன் கிளைகள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து விட்டன. இருந்தாலும் காரின் உள்ளே இருந்தவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கிளைகளை அகற்றி அந்த ஆடவரை பாதுகாப்பாக மீட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
காரை துளைத்த கிளைகள்; காயமில்லாமல் தப்பிய ஆடவர்
1 mins read
-

