உக்ரேன் நெருக்கடியைத் தணிப்பது பற்றி விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொள்கை அளவில் இணங்கி இருக்கிறார்.
அந்தச் சந்திப்பிற்கான யோசனையை பிரான்ஸ் முன்வைத்தது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கவில்லை என்றால் மட்டுமே அந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது.
அச்சந்திப்பு, உக்ரேன் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட உதவும் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் இது பற்றி கருத்துரைத்த ரஷ்ய அதிபரின் பேச்சாளர், எந்த வகை உச்ச மாநாட்டையும் ஏற்பாடு செய்வதற்கான எந்தவொரு திட்டம் பற்றியும் பேச இது சரி யான நேரமல்ல என்றார்.
உக்ரேனை ஆக்கிரமிக்க ரஷ்யா தயாராகிவிட்டதாக அமெரிக்கா கூறுகிறது. ரஷ்யா இதை மறுக்கிறது.

