தாயானபோதும் தளரா முயற்சியால் உயர்தேர்ச்சி

தாயானபோதும் தளரா முயற்சியால் உயர்தேர்ச்சி

2 mins read
b3017368-87f1-4df2-9261-b1a0dfdc2480
மருத்துவராக விரும்பும் அஷ்வினி. படம்: திமத்தி டேவிட் -

ஆ. விஷ்ணு வர்­தினி

மிலெ­னியா கல்­விக்­க­ழ­கத்­தில் பயின்­று­கொண்­டி­ருந்­த­போது தான் கரு­வுற்­றி­ருந்­ததை அறிந்­தார் அஷ்­வினி அண்­ணா­துரை, 23. இதை முற்றிலும் எதிர்­பா­ராத இவர், தாயா­ரி­டம் நிலை­மையை எடுத்­துக்­கூ­றி­ய­போது, அந்த இரட்டைக் குழந்­தை­களைப் பெற்றெடுக்கத் தான் ஆத­ர­வாக இருப்பதாக அவர் ஆறு­தல் கூறி­னார். ஆனா­லும், கல்­வியை நிறுத்தி­விட்டு பிள்­ளைப்­பேற்­றில் கவ­னம் செலுத்­த­வேண்­டிய நிலை.

சிறு­வ­ய­தி­லி­ருந்து கல்­வி­யில் ஆர்­வம் கொண்­டி­ருந்த அஷ்­வினி தொடக்­கக் கல்­லூரி வாழ்க்­கை­யில் சந்­தித்த இன்­னல்­கள் ஏரா­ளம். முழு­நேர 'ஏ' நிலை மாண­வ­ராக இருந்த அதே வேளை­யில், பகு­தி­நே­ரப் பணி­யா­ள­ரா­க­வும் இரு பெண் குழந்­தை­க­ளுக்­குத் தாயா­ராக­வும் திகழ்ந்­தார் அஷ்­வினி.

மேல்­நி­லைத் தேர்வு முடி­வு­கள் நேற்று வெளியான நிலையில் அனைத்து 'ஹெச்2' பாடங்­க­ளி­லும் 'ஏ' தர­நி­லை­யு­டன் 88.75 புள்­ளி­கள் பெற்று தேர்ச்சி பெற்­றுள்­ளார் அஷ்வினி.

குடும்ப உறுப்­பி­னர்­கள் மட்­டு­மின்றி, தன் காத­ல­ரும் உறு­து­ணை­யாக இருந்து, பின்­னர் தன்னை மணந்­து­கொண்­ட­தா­கக் கூறி­னார் அஷ்­வினி. இரு­வ­ரும் முழு­நேர வேலை செய்து தங்­கள் பிள்­ளை­களுக்­கான செல­வு­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­கின்­ற­னர்.

மகப்­பேற்­றுக் காலத்­தில் தம் தாயா­ரைப் போலவே, தமது குடும்­பத்­தில் இருந்த பெண்­கள் அனை­வரும் தமக்­குப் பேரா­த­ரவு அளித்­த­தாக அஷ்­வினி குறிப்பிட்டார்.

"குறைந்த வரு­மா­னக் குடும்­பத்­தில் மேலும் இரு குழந்­தை­களை வளர்ப்­பது கடி­ன­மாக இருந்­தது. படித்­துக்­கொண்டே குழந்­தை­க­ளைப் பரா­ம­ரித்­த­தும் பள்­ளிக்­க­ட­மை­களைச் சமா­ளித்­ததும் மன­வுளைச்­சல் தந்­தது. ஆனால், பள்­ளிச் சமூ­கம் எனக்­குத் தொடர்ந்து ஆத­ர­வு அளித்­தது." என்­றார் அஷ்­வினி.

ஓராண்டு இடை­வே­ளைக்­குப்­பின் மூன்­றாம் ஆண்­டில் சேர்ந்த அஷ்­வி­னிக்கு, நண்­பர்­களும் ஆசி­ரி­யர்­களும் தன்னை ஏற்­றுக்­கொள்­வார்­களா என்ற அச்­சம் இருக்­கவே செய்­தது. மாறாக, அஷ்வினி­யின்­மேல் அவர்­கள் அதிக அள­வில் அன்­பைப் பொழிந்­த­னர். அவ­ரின் பிள்­ளை­க­ளுக்­காக விளை­யாட்­டுப் பொருள்­கள் வாங்­கிக்­கொ­டுத்து, அவ­ரது மகள்­க­ளின் நல­னை­யும் பேணி­னர்; பள்­ளிப் பாடங்­களில் அஷ்­வினி எதிர்­கொண்ட சிர­மங்­களைக் களை­ய­வும் உத­வி­னர்.

மேலும், வகுப்பு ஆசி­ரி­யர்­களும் தனக்­குப் பக்­க­ப­ல­மாக இருந்­த­தாக அஷ்­வினி கூறி­னார்.

"எத்­தனை சவால்­கள் வந்­தா­லும் அஷ்­வினி கல்­விக்­கும் சமூ­கப் பணிக்­கும் தன்னை அர்ப்­ப­ணித்­தி­ருந்­தாள். அவள் தொடர்ந்து படிப்­பில் முன்­னே­றி­னாள். அவ­ளது நம்­பிக்கை அசாத்­தி­ய­மா­னது," என்­றார் அஷ்­வி­னி­யின் உயி­ரி­யல் பாட ஆசிரி­யர்.

இளம் தாயாக அஷ்­வினி எதிர்­கொண்ட போராட்­டங்­கள் சொல்­லி­ல­டங்கா. தன் முயற்­சி­யைக் கைவி­டும் எண்­ணம் பல­முறை குறுக்­கிட்­ட­தாக இவர் சொன்­னார்.

ஆனாலும், அப்போதெல்­லாம் தன் குழந்­தை­க­ளின் பிஞ்­சு­மு­கங்­களே தனக்குப் போரா­டும் மன­ உறு­தியை அளித்­த­தாக நெகிழ்ச்சி­யு­டன் சொன்­னார் அஷ்­வினி.

கரு­வுற்­றி­ருந்த வேளை­யில் அஷ்­வி­னிக்கு ஆத­ர­வ­ளித்த மருத்­து­வர்­கள், மருத்­து­வ­ரா­க­வேண்­டும் என்ற இவ­ரது இலட்­சி­யத்­துக்கு வித்­திட்­ட­னர். குழந்­தை­கள் அல்­லது மகப்­பேற்று மருத்­து­வ­ராக விரும்­பு­கி­றார் அஷ்­வினி. இப்­போது ஈடன் பள்­ளி­யில் மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கான உதவி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரும் அஷ்­வினி, தொடர்ந்து இந்­தச் சமூ­கத்திற்கு உத­வ­வும் எண்­ணம் கொண்­டுள்­ளார்.