உள்ளாட்சித் தேர்தல்: வெற்றியை அள்ளிய திமுக

உள்ளாட்சித் தேர்தல்: வெற்றியை அள்ளிய திமுக

1 mins read
ed118301-d878-498f-9615-47ea345e30cd
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தின்முன் கூடி வெற்றியைக் கொண்டாடும் திமுகவினர். படம்: பிடிஐ -

தமிழ்­நாட்­டில் அண்மையில் நடந்த நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் திமுக தலை­மை­யி­லான கூட்­டணி இமா­லய வெற்­றி­பெற்­றது.

மாநி­லத்­தி­ல் இருக்கும் 21 மாந­க­ராட்­சி­களை­யும் திமுக கைப்­பற்­றி­யது. அத்­து­டன், மொத்­த­முள்ள 138 நக­ராட்­சி­களில் 131ல் திமு­கவும் நான்கில் அதி­மு­க­வும் வெற்றி பெற்றன.

அது­போல், 489 பேரூ­ராட்­சி­களில் முடி­வு­கள் வெளி­யான தொகு­தி­களில் 392 இடங்­களில் திமு­க­வும் அதன் கூட்­ட­ணிக் கட்சி­களும் வென்­றன. அதி­முக 19 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. பாஜக ஆறு இடங்­க­ளி­லும் ஐஜேகே கட்சி இரு இடங்­க­ளி­லும் பாமக, அம­முக, நாம் தமி­ழர் கட்சி ஆகி­யவை தலா ஓர் இடத்­தி­லும் வென்­றன.

தேர்­தல் முடி­வு­கள் ஒட்­டு­மொத்­த­மாக திமு­க­விற்­குச் சாத­க­மாக அமைந்­த­தால் எதிர்க்­கட்­சி­கள் அதிர்ச்­சி­ய­டைந்­தன. நேற்­றுப் பிற்­பகல் 3 மணி நில­வ­ரப்­படி, 75 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட இடங்­களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

விஜ­ய­காந்­தின் தேமு­தி­க­வும் கமல்­ஹா­ச­னின் மக்­கள் நீதி மய்­ய­மும் தேற­வில்லை.

இந்த வெற்றி குறித்­துக் கருத்­து­ரைத்த தமி­ழக முதல்­வ­ரும் திமுக தலை­வ­ரு­மான மு.க.ஸ்டா­லின், "உள்­ளாட்­சித் தேர்­த­லில் நாம் பெற்­றுள்ள வெற்றி திமுக ஆட்­சி­மீது மக்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கை­யின் அடை­யா­ளம்," என்று தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்­நாட்­டில் இம்­மா­தம் 19ஆம் தேதி நகர்ப்­புற உள்­ளாட்சித் தேர்தலுக்கான வாக்­குப்­ப­திவு நடந்­தது. மொத்­தம் 12,838 தொகு­தி­களுக்கு 57,778 பேர் போட்­டி­யிட்­ட­னர். 60.70% வாக்­கு­கள் பதிவான நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.