கொவிட்-19 தொற்றால் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் ஆலயம் மூடப்பட்டது

கொவிட்-19 தொற்றால் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் ஆலயம் மூடப்பட்டது

1 mins read
66954978-6b2f-4140-b292-0d700aa9d685
கொவிட்-19 தொற்று காரணமாக செங்காங்கில் உள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செங்காங்கில் உள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் சிலருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதே அதற்குக் காரணம் என்று ஆலய நிர்வாகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் புதன் (பிப்ரவரி 23) அன்று தெரிவித்தது.

வேறு அறிவிப்பு வரும் வரை ஆலயம் மூடப்பட்டிருக்கும் என்று அதன் நிர்வாகம் கூறியது.

"பக்தர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாகவும் அது குறிப்பிட்டது.

அத்துடன், பொதுமக்களின் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வேண்டுவதாக அது கூறியது.

மேல்விவரங்களுக்கு, பொதுமக்கள் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரன் ஆலய அலுவலகத்தை 62946739 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.