விடிஎல்: நான்கு இடங்களைச் சேர்ந்த 476 பேர் சிங்கப்பூர் வர அனுமதி

1 mins read
c244dc18-8ab5-4212-8c42-21b94fe14986
-

ஹாங்காங், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 பயணிகளுக்கு 'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையின்கீழ் சிங்கப்பூருக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தகைய அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முதல் நாளிலேயே அந்த நான்கு இடங்களைச் சேர்ந்த 476 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 90% சுற்றுப்பயணிகள்; எஞ்சியவர்கள் வேலை அனுமதிச்சீட்டு வைத்துள்ளவர்கள்.

பிப்ரவரி 25க்கும் மே 6ஆம் தேதிக்கும் இடையே அவர்கள் சிங்கப்பூர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே 'விடிஎல்' திட்டத்தில் பங்கேற்கும் மற்ற இடங்களைச் சேர்ந்த 36,000க்கும் அதிகமானோருக்கு அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய கிழக்கு நாடுகளுடன் சென்ற டிசம்பரில் 'விடிஎல்' திட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஓமிக்ரான் பரவலால் அது தள்ளிவைக்கப்பட்டது.

'விடிஎல்' அனுமதி வழங்கப்பட்டவர்களில் 342 பேர் ஹாங்காங்வாசிகள்; 117 பேர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைச் சேர்ந்தவர்கள்.