போர் தொடங்கியது! உக்ரேன் மீது ர‌‌ஷ்யா தாக்குதல்

போர் தொடங்கியது! உக்ரேன் மீது ர‌‌ஷ்யா தாக்குதல்

1 mins read
fd0f4dbc-0a38-4655-8b9f-e1a74598dec6
உக்ரேன் எல்லையில் ர‌ஷ்ய ராணுவம். படம்: ராய்ட்டர்ஸ் -

உக்ரேன் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது ர‌ஷ்யா

உக்ரேன் மீது போர் தொடுக்கும்படி ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இன்று (24 பிப்ரவரி) காலை உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போருக்கு யாரும் குறுக்கே வந்தால் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என்றும் புட்டின் எச்சரித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகள் இடையே போர் துவங்கி இருப்பதால் உலக பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. போரை நிறுத்த உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரேன் உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விரிவான செய்திகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்