கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பால் விதிமுறை மாற்றங்கள் ஒத்திவைப்பு

கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பால் விதிமுறை மாற்றங்கள் ஒத்திவைப்பு

2 mins read

நடப்­பில் உள்ள கொவிட்-19 பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மாற்­றி

­அமைக்­கப்­படும் என்று அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் கடந்த சில நாள்­க­ளாக சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் இன்று நடப்­புக்கு வர இருந்த மாற்­றங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இன்­றும், அடுத்த மாதம் 4ஆம் தேதி­யி­லும் மாற்­றங்­கள் படிப்­ப­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட இருந்­தன.

புதிய தேதி கூடிய விரை­வில் அறி­விக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

அது­வரை தற்­போது நடப்­பில் உள்ள விதி­மு­றை­கள் தொட­ரும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

கொவிட்-19 பாது­காப்பு நட

வடிக்­கை­கள் தொடர்­பான ஐந்து அம்­சங்­கள் எளி­மைப்­ப­டுத்­தப்­படும் என்று இம்­மா­தம் 16ஆம் தேதி­யன்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஒன்­று­கூ­டு­வோர் எண்­ணிக்கை, முகக்கவ­சம் அணி­தல், வேலை­யிட விதி­மு­றை­கள், சமூக இடை­வெளி விதி­மு­றை­கள், குறிப்­பிட்ட சில இடங்­களில் அனு­ம­திக்­கப்

படக்­கூ­டி­யோர் எண்­ணிக்கை ஆகி­யவை அந்த ஐந்து அம்­சங்­க­ளா­கும்.

எந்த ஒரு நேரத்­தி­லும் ஒரு

வீட்­டிற்கு ஐந்து விருந்­தி­னர்­கள் வரை செல்­ல­லாம் என்ற விதி­முறை நடப்­புக்கு வர இருந்­தது. தற்­போது ஒரு நாளுக்கு அதி­க­பட்­சம் ஐந்து விருந்­தி­னர்­கள் மட்­டுமே ஒரு

வீட்­டிற்­குச் செல்­ல­லாம்.

அதே போல வேலை­யி­டங்­களில் ஐந்து பேர் வரை ஒன்­று­கூ­டு­வதை அனு­ம­திக்க அமைச்சு திட்­ட­மிட்­டி­ருந்­தது. மாற்­றங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தால் முகக்கவ­சங்­கள் அணி­யும் சூழல்­களில் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்

­பி­டிப்­பது ஊக்­கு­விக்­கப்­பட்­டா­லும் அது கட்­டா­ய­மா­ன­தாக இருந்­தி­ருக்­காது. அவ்­வாறு நடந்­தி­ருந்­தால் பொது இடங்­களில் ஓர் இருக்­கையை விட்டு அம­ரும் வழக்­கம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கக்­கூ­டும்.

அடுத்த மாதம் 4ஆம் தேதி­யி­லி­ருந்து திரு­ம­ணங்­கள், வழி­பா­டு­கள், இறு­திச்­ச­டங்­கு­கள், வர்த்­த­கக் கூட்­டங்­கள் ஆகி­யவை நடை­பெ­றும் இடங்­க­ளின் அள­வுக்கு ஏற்ப அதில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தீர்­மா­னிக்­கப்­படும் என்று முத­லில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் மாற்­றங்­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தால் இத்­த­கைய இடங்­களில் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் மக்கள் அனு­ம­திக்­கப்­படும் அணு­கு­முறை தொடர்­கிறது.

மாற்­றங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தால் இன்று முதல் அனைத்து வகை விளை­யாட்டு நட­வ­டிக்­கை­க­ளி­லும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அதி­க­பட்­சம் 30 பேர் பங்­கெ­டுக்­கும் நிலை நடப்­புக்கு வந்­தி­ருக்­கக்­கூ­டும்.

"கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்­கை­யை­யும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்­கை­யை­யும் கட்­டுக்­குள் வைத்­தி­ருப்­ப­தில் தற்­போ­தைய விதி­மு­றை­கள் உத­வி­னால் அதைத் தொடர்­வது நல்­லது. அதற்­குப் பதி­லாக தற்­போது கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­னால் அது நிலை­மையை மோச­மாக்­கக்­கூ­டும்," என்று தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் தொற்­று­நோய் நிபு­ணர் பேரா­சி­ரி­யர் டேல் ஃபிஷர் கூறி­னார்.