அமைச்சர் சண்முகம்: உக்ரேன் சிங்கப்பூருக்குக் கற்றுத் தரும் பாடம்

அமைச்சர் சண்முகம்: உக்ரேன் சிங்கப்பூருக்குக் கற்றுத் தரும் பாடம்

1 mins read
1f6b3241-15ac-45d3-80ed-cb30f05a39f7
ரஷ்ய தலைநகர் கீவ்வில் ரஷ்ய போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அடுக்குமாடிக் வீட்டுக் கட்டடம். உக்ரேன்  சிங்கப்பூருக்குக் கற்றுத் தரும் நான்கு பாடங்கள் பற்றி சட்ட உள்துறை அமைச்சர் கா சண்முகம் நினைவு கூர்ந்துள்ளார். படம்: ஏஎஃப்பி -

உக்ரேனை ரஷ்யா தாக்கியதை அடுத்து, சிறிய நாடான சிங்கப்பூருக்கு உக்ரேன் கற்றுத் தரும் நான்கு பாடங்கள் பற்றி சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நினைவு கூர்ந்துள்ளார்.

அது குறித்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) அன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு சண்முகம் பதிவிட்டார்.

உக்ரேனிய பகுதியாக இருந்த கிரைமியா தீபகற்பத்தை, ரஷ்யா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சுமார் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதையும் அந்த நிலவரம் பற்றி 2014ல் வெளியுறவு அமைச்சர் எனும் முறையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதையும் திரு சண்முகம் நினைவுகூர்ந்தார்.

சிறிய நாடுகள் எதிர்நோக்கும் அனைத்துலகச் சவால்கள் பற்றி அப்போது குறிப்பிட்டதை அமைச்சர் பதிவிட்டார்.

அடிப்படையில், செயல்படுத்த முடிந்தால்தான் ஒப்பந்தங்கள் பயன் தருகின்றன. உக்ரேனால் ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியாது போய், நட்புநாடுகள் அதன் உதவிக்கு வராவிட்டால், அத்தகைய ஒப்பந்தத்தால் உக்ரேனுக்குப் பயன் இல்லை.

அனைத்துலக உறவில் நாடு எவ்வளவு பெரியது என்பது முக்கியம். தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத சிறிய நாடு தன் அரசரிமைக்கு அபாயம் ஏற்படுத்துகிறது.

மூன்றாவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தால் சிறிய நாடுகளைப் பாதுகாக்க எல்லா நேரங்களிலும் உறுதியுடன் செயலில் இறங்க முடியாது.

நான்காவதாக அதிகாரமிக்க நாடுகள் அல்லது பன்னாட்டு அமைப்புகளுக்கு இடையே சிக்கிக் கொண்டால், உக்ரேன் போன்ற சிறிய நாடு பகடைக்காயாக மாறக்கூடும் என்றும் திரு சண்முகம் கூறினார்.