கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் அதன் டாக்சி கட்டணங்களை உயர்த்த உள்ளதாகக் கூறியதை அடுத்து, டிரொன்ஸ்கேப், பிரைம் டாக்சி, பிரிமியர் டாக்சி, ஸ்ட்ரைட்ஸ் டாக்சி ஆகிய நிறுவனங்களும் அவற்றின் கட்டணங்களை அதிகரிக்கும்.
பொதுப் போக்குவரத்து மன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) அன்று இதைத் தனது அறிக்கையில் தெரிவித்தது.
கட்டணங்களை உயர்த்த இருப்பதாக நிறுவனங்கள் தன்னிடம் உறுதிப்படுத்தியதாக மன்றம் கூறியது.
கட்டண மாற்றத்துக்கு குறைந்தது ஏழு நாள்களுக்கு முன்னர் அந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் அது பற்றி தெரிவிக்க வேண்டும்.
மார்ச் 7 அல்லது 8ஆம் தேதி அளவில் இதர டாக்சிகளின் கட்டணங்கள் உயரக்கூடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறியது.
கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் மார்ச் 1ம் தேதி அதன் டாக்சி கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது.
சிங்கப்பூரில் உள்ள 60 விழுக்காட்டு டாக்சிகளை அது நடத்துகிறது.

