உக்ரேன் தலைநகர் கியவுக்குள் முன்னேறிச் செல்லும் ரஷ்ய படைகள்

உக்ரேன் தலைநகர் கியவுக்குள் முன்னேறிச் செல்லும் ரஷ்ய படைகள்

1 mins read
6190042d-bd66-4c99-b85e-e15f2bfa4ead
கியவில் குடியிருப்புப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் தெரியாத விமானம். ரஷ்ய படைகள் உக்ரேனிய தலைநகர் கீவ்வுக்குள் நுழைந்திருப்பதாக உக்ரேனிய தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்  -

ரஷ்ய படைகள் உக்ரேனிய தலைநகர் கியவுக்குள் நுழைந்திருப்பதாக உக்ரேனிய தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.

கியவின் வடக்குப் பகுதியில், உக்ரேனிய நாடாளுமன்றத்துக்கு 9 கிலோமீட்டர் தொலைவில் சில ரஷ்ய படைகள் இருப்பதாக அது கூறியது.

ரஷ்ய டாங்குகள் நகருக்குள் வேகமாக முன்னேறிச் செல்வதை காணொளிகள் காட்டின.

தலைநகரில் வெடிப்புச் சத்தங்களும் கேட்டுள்ளன.

உக்ரேனிய மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ரஷ்யா பயங்கரமான எறிபடைத் தாக்குதல்களை நடத்துவதாக அதிபர் விளோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக பொதுமக்களின் உயிரையும் தம்மையும் தம் குடும்பத்தையும் அது குறி வைப்பதாகவும் உக்ரேனிய திரு ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.

கியவில் குடிமக்கள் இருக்கும் 33 இடங்கள் இதுவரை தாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

உக்ரேனில் வியாழக்கிழமை (பிப்ரவரி 24) அன்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் 137 உக்ரேனியர்கள் மாண்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

முன்னதாக செர்னோபில் அணு ஆலையை ரஷ்யா கைப்பற்றியது.

விரிவான செய்திகளை நாளைய தமிழ் முரசு அச்சுப் பிரதியில் வாசிக்கலாம்.