மற்ற டாக்சி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த முடிவு

மற்ற டாக்சி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த முடிவு

2 mins read

வரும் மார்ச் முதல் தேதி­யில் இருந்து டாக்சி கட்­ட­ணங்­களை கம்­ஃபர்ட்­டெல்­குரோ உயர்த்­த­ இருக்­கும் நிலை­யில், டிரான்ஸ்­கேப், பிரைம் டாக்சி, பிரீ­மி­யர் டாக்சி, ஸ்டி­ரைட்ஸ் டாக்சி ஆகிய மற்ற டாக்சி நிறு­வ­னங்­களும் கட்­ட­ணத்தை உயர்த்­தப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளன.

தங்­க­ளது இந்த முடிவை அந்­நி­று­வ­னங்­கள் தன்­னி­டம் தெரி­வித்­தி­ருப்­ப­தை ஓர் அறிக்கைமூலம் பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் நேற்று உறு­தி­செய்­தது. அதன் தொடர்­பில் வேறு விவ­ரம் எது­வும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

டாக்சி கட்­ட­ணத்தை உயர்த்­தப்­போ­வ­தாக இம்­மா­தத் தொடக்­கத்­தில் கம்­ஃபர்ட்­டெல்­குரோ அறி­வித்­தி­ருந்­தது. அத­னையடுத்து, மற்ற டாக்சி நிறு­வ­னங்­களும் அதே­போல் கட்­ட­ணத்தை உயர்த்­த­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

புதிய கட்­டண உயர்வை நடை­மு­றைப்­ப­டுத்­து­முன் அது­கு­றித்து குறைந்­தது ஏழு நாள்­க­ளுக்­கு­முன் அந்­நி­று­வ­னங்­கள் பய­ணி­க­ளுக்­குத் தெரி­விக்க வேண்­டும்.

இந்நிலையில், மார்ச் 7 அல்­லது 8ஆம் தேதி­வாக்­கில் மற்ற நிறு­வ­னங்­க­ளின் கட்­டண உயர்வு நடை­மு­றைக்கு வர­லாம் என ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

கடை­சி­யாக, 2011ஆம் ஆண்­டி­லும் இப்­படி கம்­ஃபர்ட்­டெல்­குரோ நிறு­வ­னம் டாக்சி கட்­ட­ணத்தை உயர்த்­தி­ய­பின் மற்ற டாக்சி நிறு­வனங்­களும் அத­னைப் பின்­பற்றி, கட்­டண உயர்வை அறி­வித்­தன. அப்­போது, சாதா­ரண டாக்­சி­க­ளுக்­குத் தொடக்­கக் கட்­ட­ணத்­தில் 20 காசும் அதன்­பின் வரும் தொலைவு அடிப்­ப­டை­யி­லான கட்­ட­ணத்­தில் இரண்டு காசும் உயர்த்­தப்­பட்­டன.

அது­போல இம்­மு­றை­யும் தொடக்­கக் கட்­ட­ணம் 20 காசு உயர்த்­தப்­படும் என்று கம்­ஃபர்ட்­டெல்­குரோ அறி­வித்­துள்­ளது.

அத்­து­டன், தொலைவு, நேர அடிப்­ப­டை­யி­லான கட்­ட­ண­மும் கூடு­கிறது. சாதா­ரண டாக்­சி­களுக்கு ஒவ்­வொரு 400 மீட்­டர் தொலை­விற்­கும் (அல்­லது 10 கிலோ­மீட்­ட­ருக்­குப் பின் ஒவ்­வொரு 350 மீட்­ட­ருக்­கும்) இரண்டு காசும் ஒவ்­வொரு 45 நொடி­கள் காத்­தி­ருப்­புக்கு இரண்டு காசும் கட்­ட­ணம் உயர்த்­தப்­ப­ட­வுள்­ளது.

சென்ற 2020ஆம் ஆண்­டின் நடுப்­ப­கு­தி­யில் இருந்து எரி­பொருள் விலை தொடர்ந்து அதி­க­ரித்து வருகிறது. அதனால் ஏற்படும் நடைமுறைச் செலவு அதிகரிப்பை எதிர்கொள்ளவும் கொவிட்-19 பெருந்­தொற்­றால் வரு­மான இழப்பை எதிர்­கொண்­டுள்ள டாக்சி ஓட்­டு­நர்­களுக்கு ஆத­ர­வ­ளிக்­க­வும் டாக்சி கட்­ட­ணம் உயர்த்­தப்­ப­டு­வ­தாக கம்­ஃபர்ட்­டெல்­குரோ தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த 1998ஆம் ஆண்­டில் இருந்து டாக்சி கட்­ட­ணங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்­டன. அதா­வது, டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார்­க­ளுக்­கான கட்­ட­ணங்­களை முடி­வு­செய்­வ­தில் பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் குறுக்­கிடாது.

இருப்பினும், கட்­டண உயர்வு குறித்த விவ­ரங்­களை டாக்சி, தனி­யார் வாடகை கார் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் மன்­றத்­தி­டம் தெரி­விக்க வேண்­டும். இதன்­மூ­லம், கட்­டண வசூ­லிப்­பில் வெளிப்­ப­டைத்­தன்மை இருக்­கும். டாக்சி சேவையை நாடும்­போது கூடு­த­லாக எவ்­வ­ளவு செலுத்த வேண்­டி­யி­ருக்­கலாம் என்­பதைப் பய­ணி­களும் அறிந்து­கொள்ள முடி­யும்.