இந்தோனீசியாவில் நிலநடுக்கம்; எழுவர் மரணம்

இந்தோனீசியாவில் நிலநடுக்கம்; எழுவர் மரணம்

2 mins read
f25b8ccc-6490-49db-837c-b745e872345f
ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவான நிலநடுக்கத்தால் மேற்கு பசாமானில் சேதமடைந்த பள்ளிவாசல். படம்: இபிஏ -

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன

இந்­தோ­னீ­சி­யா­வின் சுமத்ரா தீவை நேற்­றுக் காலை உலுக்­கிய நில­நடுக்­கத்­தில் மேற்கு பசா­மான் பகு­தி­யில் குறைந்­தது எழு­வர் மாண்­டு­விட்­ட­னர்; 85 பேர் காய­ம­டைந்­த­னர்.

சிங்­கப்­பூர் நேரப்­படி காலை 9.39 மணிக்கு ஏற்­பட்ட இந்த நில­நடுக்­கம் ரிக்­டர் அள­வு­கோ­லில் 6.1 என்று பதி­வா­னது. இத­னால் 400 வீடு­களும் பள்ளி, வங்கி, பள்ளிவாசல் உள்­ளிட்ட பல கட்­ட­டங்­களும் சேத­ம­டைந்­த­தாக இந்­தோ­னீ­சி­யப் பேரி­டர் மேலாண்மை அமைப்பு தெரி­வித்­தது. நில­ந­டுக்­கத்­தைத் தொடர்ந்து சுனாமி எச்­ச­ரிக்கை விடப்­ப­ட­வில்லை.

சிங்­கப்­பூ­ரிலும் பிடோக், செங்­காங், ஹவ்­காங், பொங்­கோல், லெவண்­டர் உள்­ளிட்ட பகு­தி­க­ளி­லும் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தி­லும் நில அதிர்­வு­கள் உண­ரப்­பட்­டன.

ஹவ்­காங்­கில் பத்­தாம் தளத்­தில் உள்ள தமது வீட்­டில் காலை உணவு உட்­கொண்­ட­போது உணவு­மேசை ஆடி­ய­தா­கச் சொன்­னார் திரு­வாட்டி லின் சுவா, 44.

"இரு­முறை கிட்­டத்­தட்ட ஐந்து நொடி­க­ளுக்கு அதிர்­வு­கள் நீடித்­தன. என் கண­வ­ரும் அதை உணர்ந்­தார்," என்­றார் திரு­வாட்டி சுவா.

ஓரிரு நிமி­டங்­க­ளுக்கு அதிர்வு­களை உணர்ந்­த­தா­கச் சொன்­னார் லெவண்­ட­ரில் வசிக்­கும் திரு­வாட்டி வெண்டி கோ.

"முத­லில் எனது புதிய சலவை இயந்­தி­ரம்­தான் அப்­படி அதிர்­கிறது என்று நினைத்­தேன். ஆனால், என்­னு­டன் காணொளி அழைப்­பில் இருந்த மற்­ற­வர்­களும் அவ்­வாறு உண­ரவே, பின்­னர் அது நில­ந­டுக்­கம் என்­பதை உணர்ந்­தேன்," என்­றார் 40களில் இருக்கும் திட்ட மேலாளரான திருவாட்டி வெண்டி.

"கட்­ட­டம் ஆடு­வ­து­போ­லத் தோன்­றி­யது. மேசை­மீது இருந்த கணி­னித் திரை­களும் நகன்­றன," என்றார் பிடோக்­கில் வசிக்கும் சமூகத் திட்ட நிர்­வாகி ஷால், 26.

நில­ந­டுக்­கத்­தைத் தொடர்ந்து, பல அழைப்­பு­கள் வந்­த­தா­கக் காவல்­து­றை­யும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் தெரி­வித்­தன. ஆயி­னும், எவ­ரும் காய­மடையவில்லை என்று குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

மலே­சி­யா­வி­லும் நில அதிர்­வு­கள் உண­ரப்­பட்­டன. சிலாங்­கூர், பேராக், நெகிரி செம்­பி­லான், மலாக்கா, ஜோகூர் ஆகிய மேற்­குப் பகு­தி­களில் நில அதிர்­வு­கள் உண­ரப்­பட்­டி­ருக்­க­லாம் என்று அந்­நாட்­டின் வானிலை மையம் குறிப்பிட்டது.