வெளியேற விரும்பாத செலென்ஸ்கி

வெளியேற விரும்பாத செலென்ஸ்கி

1 mins read
be35f48f-4991-430b-b9ef-3b19afe83a5c
-

உக்­ரே­னி­லி­ருந்து தாம் வெளி­யேற வாஷிங்­டன் வழங்­கிய உத­வியை உக்­ரேன் அதி­பர் வொலோ­ட­மி­யர் செலென்ஸ்கி (படம்) முன்­ன­தாக மறுத்­தி­ருந்­தார்.

"இங்குதான் சண்டை நடக்கிறது. எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, பயண உதவி அல்ல," என்று இது குறித்த விவரம் தெரிந்த உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்ய படையெடுப்புக்கு திரு செலென்ஸ்கி பதிலளித்த விதத்தை சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டினர். கியவிலிருந்து தப்பியோடியதாக வந்த தகவலை மறுக்க நேற்று முன்தினம் அவர் கியவில் இருப்பதைத் தாமாகவே காணொளியில் பதிவுசெய்து வெளியிட்டார்.

ஆயுதம் ஏந்தி களமிறங்கும் உக்ரேனியர்கள் - பக்கம் 8