சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) 20,000க்குக்கீழ் குறைந்தது.
புதிதாக 14,228 பேருக்குத் தொற்று உறுதியானது. சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 16,857ஆக இருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் தொற்றுப் பாதிப்பு 20,000ஐ கடந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கொவிட்-19க்காக மருத்துவமனைகளில் 1,553 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். சனிக்கிழமையும் இதே எண்ணிக்கைதான் பதிவானது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் எண்ணிக்கை 46ஆகக் குறைந்தது. சனிக்கிழமை அது 50ஆக இருந்தது. 214 பேருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது.
கொவிட்-19 காரணமாக மேலும் எண்மர் உயிரிழந்தனர்.
ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் 11,809 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. பல்படிய தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் 2,255 பேருக்குத் தொற்று உறுதியானது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 164 பேருக்கும் தொற்று உறுதியானது. அவர்களில் 109 பேருக்கு பிசிஆர் மூலமும் 55 பேருக்கு ஏஆர்டி மூலமும் தொற்று கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் 1.14ஆக உள்ளது. சனிக்கிழமை அது 1.21ஆக இருந்தது.


