அமைச்சர் விவியன்: உக்ரேனில் இன்னமும் ஆறு சிங்கப்பூரர்கள்

அமைச்சர் விவியன்: உக்ரேனில் இன்னமும் ஆறு சிங்கப்பூரர்கள்

2 mins read

போர் நடக்­கும் உக்­ரே­னில் இருந்து மேலும் மூன்று சிங்­கப்­பூ­ரர்­கள் மீட்­கப்­பட்­டு­விட்­ட­னர். அந்­நாட்­டில் இன்­ன­மும் ஆறு சிங்­கப்­பூ­ரர்­கள் உள்­ள­னர் என்று வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் நாடாளுமன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

உக்­ரே­னில் ஒன்­பது சிங்­கப்­பூரர்­கள் இருப்­ப­தாக மூன்று நாள்­களுக்கு முன் மன்­றத்­தில் தான் தெரி­வித்­ததை அமைச்­சர் நினைவு­கூர்ந்­தார்.

தனது அமைச்­சுக்­கான வரவு செல­வுத் திட்ட விவா­தத்­தில் பேசிய டாக்­டர் விவி­யன், உக்­ரேனில் மனி­தா­பி­மான உத­வி­களைப் பெற சிங்­கப்­பூர் தொடர்ந்து முயல்­வ­தா­கக் கூறி­னார்.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் பத்து நாடு­களை உள்­ள­டக்­கிய ஆசி­யான் அமைப்பு விரை­வில் அறிக்கை வெளி­யி­டும் என்­றும் உக்­ரே­னில் போரை நிறுத்­து­மாறு அந்த அறிக்கை கோரிக்கை விடுக்­கும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

உக்­ரேன் பிரச்­சினை தொடர்­பி­லான சிங்­கப்­பூ­ரின் நிலை பற்றி மேலும் விவ­ரங்­க­ளைத் தெரி­விக்­கும்­படி உறுப்­பி­னர்­கள் கேட்டுக் கொண்டதை அவர் சுட்டினார்.

நாடு­க­ளின் இறை­யாண் மையை, சுதந்­தி­ரத்தை, எல்­லை­களைத் தெள்­ளத்­தெ­ளி­வாக மீறு­கின்ற செயல்களுக்கு எதி­ரான ஒரு நிலையை சிங்­கப்­பூர் எப்­படி எடுக்க வேண்­டும் என்­பதை விவ ரித்து தான் தாக்­கல் செய்த அமைச்­சர்நிலை அறிக்­கையை மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

கொவிட்-19 தொற்று பற்­றி­யும் அத­னால் வெளி­யு­ற­வுக் கொள்கை­யில் ஏற்­பட்ட தாக்­கம் பற்­றி­யும் அமைச்­சர் கருத்து கூறி­னார்.

கடந்த 2020ல் தொற்று தலை­காட்­டி­ய­தில் இருந்து 4,600க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் வெளி­நா­டு­களில் இருந்து திரும்ப வெளி­யு­றவு அமைச்சு உதவி உள்ளது. விடிஎல் பயணத் திட்­டம் தொடங்கு ­வ­தற்கு தமது அமைச்சு ஆத­ரவு அளித்துள்ளது என்றாரவர்.