உக்ரேனின் மரியபூல், வோல்னோவக்கா நகர்களில் தற்காலிக போர்நிறுத்தத்தை ரஷ்ய தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (மார்ச் 5) அறிவித்துள்ளது. மாஸ்கோ நேரப்படி காலை 10 மணியிலிருந்து (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3 மணி) போர்நிறுத்தம் நடப்புக்கு வந்துள்ளது.
உக்ரேனின் அவ்விரு நகர்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு இது வகைசெய்யும் என்று அமைச்சு கூறியது.
மாஸ்கோ நேரப்படி நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை (சிங்கப்பூர் நேரப்படி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை) மரியபூல் நகரை விட்டு வெளியேற குடிமக்கள் அனுமதிக்கப்படுவர் என்று ரஷ்யாவின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம், அதிகாரிகள் கூறியதாக மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டது.

