உக்ரேனிய துறைமுக நகரான மரியபூலில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்நிறுத்த உடன்பாட்டை மாஸ்கோ துருப்புகள் மீறியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏறக்குறைய 450,000 பேர் வசிக்கும் தென் நகரமான மரியபூலில் குடிமக்களின் மீட்பு நடவடிக்கை சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கவிருந்தது.
"மரியபூல் குடியிருப்பாளர்கள் அனைவரும் கலைந்துசென்று பாதுகாப்பான இடங்களுக்குள் தஞ்சம் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். மீட்பு நடவடிக்கை குறித்து மேல்விவரம் கூடிய விரைவில் வெளியிடப்படும்," என்று மாநகராட்சி அதிகாரிகள் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.


