4 ரஷ்ய வங்கிகளுக்கு சிங்கப்பூர் தடை

2 mins read

மின்னணு, கணினி, ராணுவப் பொருள்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யவும் அனுமதி இராது

உக்­ரேன் மீது படை எடுத்­துள்ள ரஷ்யா வின் பொரு­ளி­ய­லுக்­குப் பாதிப்பை ஏற்­படுத்­தும் வகை­யில், நான்கு ரஷ்ய வங்கி­களுக்கு சிங்­கப்­பூர் தடை­களை விதிக் கிறது. குறிப்­பிட்ட சில ஏற்­று­மதிகளுக்­கும் தடை விதிக்­கப்­படும் என்று அறிவிக்கப் பட்டு உள்ளது.

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் வங்­கி­களும் நிதி நிறு­வ­னங்­களும் ரஷ்­யா­வின் வங்­கி­களு­டன், அந்­தத் தடை கார­ண­மாக தொழில்­களில் ஈடு­பட முடி­யாது. மின்னணு, கணினி, ராணு­வப் பொருள்கள் உள்­ளிட்ட பொருள்­களை ரஷ்­யா­வுக்கு ஏற்­று­மதி செய்­ய­வும் தடை வரும்.

உக்ரேன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷ்யாவை, சிங்கப்பூர் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளும் கண்டித்து இருக்கின்றன.

ரஷ்யாவுக்கான சிங்கப்பூர் தடைகள் தொடர்பான மேல் விவரங்களை வெளி யுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.

"இந்­தத் தடை­களும் கட்­டுப்­பாடுகளும் உக்­ரேன் மீது போர் தொடுத்து அதன் இறை­யாண்­மை­யைக் கீழ­றுப்­ப­தற்­கான ரஷ்­யா­வின் ஆற்­ற­லைக் கட்­டுப்­ப­டுத்­தும்," என்று அமைச்சு தெரி­வித்­தது.

அந்த நான்கு வங்­கி­க­ளு­டன் பரி­வர்த்­தனை­களில் ஈடு­பட அல்­லது தொழில் உற­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள நிதி நிறு­வ­னங்களுக்­குத் தடை விதிக்­கப்­படும்.

ஏற்­கெ­னவே தொழில் உற­வு­கள் இருக்­கும்­பட்­சத்­தில் நிதி நிறு­வ­னங்­கள் அந்த நான்கு ரஷ்ய வங்­கி­க­ளின் சொத்­து­களை, நிதியை முடக்­கி­விட வேண்­டும்.

ரஷ்ய அர­சுக்­கும் ரஷ்ய கூட்­ட­மைப்பு மத்­திய வங்­கிக்­கும் அவற்­றின் கட்­டுப்­பாட்­டில் உள்ள அமைப்­பு­க­ளுக்­கும் நிதி திரட்டுவதற்­கான பரி­வர்த்­த­னை­கள், நிதிச் சேவை­களும் தடை செய்­யப்­படும்.

புதிய பங்குப் பத்திரங்களை வாங்குவது, விற்பது, புதிதாக நிதி திரட்ட வசதி செய்யும் நிதிச் சேவைகளை வழங்குவது, இந்த அமைப்புகளுக்கு புதிய கடன்களை வழங்குவது அல்லது அதில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு இத்தடைகள் பொருந்தும்.

இவற்றின் புதிய பங்குகளில் சிங்­கப்பூர் அர­சும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் முத­லீடு செய்­யாது. ரஷ்யா தொடர்பான தடைசெய்யப்படும் பரிவர்த்தனைகள் இணைய நாணயங்களுக்கும் பொருந்தும்.