ஏப்ரல் 1 முதல், வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லையை மீண்டும் திறக்கும் மலேசியா

ஏப்ரல் 1 முதல், வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லையை மீண்டும் திறக்கும் மலேசியா

1 mins read
df73d853-6925-4338-903b-cb37d38eeb6b
கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து, வெளிநாட்டுப் பயணிகளுக்கு மலேசியா அதன் எல்லையை மீண்டும் திறக்கவுள்ளது.

கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி மலேசியா வரலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) கூறியிருக்கிறார்.

பயணத்துக்கு முந்திய ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும் மலேசியா வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ஆர்டிகே-ஆன்டிஜன் விரைவு பரிசோதனையும் பயணிகள் செய்துகொள்ள வேண்டும்.