உக்ரேன் நகரங்களைச் சரமாரியாகத் தாக்கும் ரஷ்யா

உக்ரேன் நகரங்களைச் சரமாரியாகத் தாக்கும் ரஷ்யா

1 mins read
8959b021-edad-4638-b436-8fa2000c6983
தாக்குதலுக்குப் பிறகு நிப்ரோ நகரின் காலணித் தொழிற்சாலை ஒன்றின் எஞ்சிய பகுதி. படம்: ஏஎஃப்பி -

உக்­ரே­னின் லுட்ஸ்க், இவானோ ஃப்ரான்­கிவ்ஸ்க், நிப்ரோ நக­ரங்­களை ரஷ்­யப் படை­கள் குறி­வைத்­துத் தாக்­கத் தொடங்­கி­யுள்­ளன. தாக்­கு­தல்­கள் தீவி­ர­ம­டைந்து வரும் நிலை­யில், உக்­ரே­னின் தலை­ந­கர் கியவ்வை படை­கள் நெருங்­கு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ரஷ்­யா­வின் படை­யெ­டுப்பு தொடங்­கிய நாள்­மு­தல் நிப்ரோ தாக்­கு­த­லுக்கு ஆளா­கி­யது இதுவே முதல் முறை என்று கூறப்­பட்­டது. இதில் குறைந்­தது ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­க­வும் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், ரஷ்­யப் படை­கள் தங்­க­ளின் முற்­று­கை­யி­டும் பாணியை மாற்றி அமைத்து கியவ்வை நெருங்­கு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. ரஷ்யா போர் தொடங்­கி­யது முதல் 2.5 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் உக்­ரே­னி­லி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­னர்.

இதற்கிடையே, மன­நல மருத்­து­வ­மனை ஒன்றை ரஷ்­யப் படை­கள் தாக்­கி­யுள்­ள­தாக உக்­ரேன் நேற்று குற்­றம் சாட்­டி­யது. இருப்­பி­னும், யாரும் காய­ம­டை­ய­வில்லை என்று பின்­னர் தெரி­விக்­கப்­பட்­டது.

கூடுதல் செய்தி - பக்கம் 8