உங்களுடைய மகன் எங்கு இருக்கிறார் என்பதை விசாரிக்கவும்: ரஷ்யத் தாய்மார்களுக்கு உக்ரேனிய அதிபர் வேண்டுகோள்

உங்களுடைய மகன் எங்கு இருக்கிறார் என்பதை விசாரிக்கவும்: ரஷ்யத் தாய்மார்களுக்கு உக்ரேனிய அதிபர் வேண்டுகோள்

1 mins read
820ea65e-99e0-4dfc-8ade-212a01afd872
போருக்கு அனுப்பப்படுவதைத் தடுக்குமாறு ரஷ்ய ராணுவ வீரர்களின் தாய்மார்களுக்கு உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். படம்: உக்ரேனிய அதிபர் மாளிகை -

தங்களுடைய மகன்கள் உக்ரேனில் போருக்கு அனுப்பப்படுவதைத் தடுக்குமாறு ரஷ்ய ராணுவ வீரர்களின் தாய்மார்களுக்கு உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"ரஷ்யத் தாய்மார்களிடம் இதை நான் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அந்நிய நாட்டில் உங்களுடைய பிள்ளைகளைப் போருக்கு அனுப்பாதீர்கள்," என்று டெலிகிராமில் திரு ஸெலென்ஸ்கி வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் வலியுறுத்தினார்.

"உங்களுடைய மகன் எங்கு இருக்கிறார் என்பதை விசாரிக்கவும். உக்ரேனுக்கு எதிராக உங்களுடைய மகன் போருக்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடும் என்று உங்களுக்கு சிறிதளவு சந்தேகம் எழுந்தாலும்கூட, உடனடியாக செயல்படுங்கள். அவர் கொல்லப்படுவதை அல்லது பிடிபடுவதைத் தடுத்துவிடுங்கள்," என்றார் திரு ஸெலென்ஸ்கி.

"இந்தப் படுமோசமான போரை உக்ரேன் ஒருபோதும் தேடியதில்லை. உக்ரேனுக்கு இந்தப் போர் வேண்டாம். ஆனாலும், உக்ரேன் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்," என்றும் அவர் சொன்னார்.