அம்னோ வெற்றிமுகம்

அம்னோ வெற்றிமுகம்

2 mins read

ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் 2022

மலே­சி­யா­வின் ஜோகூர் மாநில சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­னணி மொத்­த­முள்ள 56 தொகுதி­களில் 42ல் முன்­னிலை பெற்­று இருந்ததாக அதி­கா­ர­பூர்­வ­மற்ற முடி­வு­கள் தெரி­வித்­தன (நேற்­று இ­ரவு 8.40 மணி நில­வ­ரம்).

தேர்­தல் நாளான நேற்று அதி­கா­லை­யில் இருந்தே வாக்­கா­ளர்­கள் வாக்­குச்­சா­வ­டி­களில் வரி­சை­யில் நிற்­கத் தொடங்­கி­விட்­ட­னர். மலே­சி­யா­வில் கொவிட்-19 தொற்று அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில் அவர்­கள் முகக்­க­வ­சம் அணிந்­தும் பாது­காப்பு இடை­வெளி விதி­யைப் பின்­பற்­றி­யும் வரி­சை­யில் காத்­தி­ருந்­த­னர்.

காலை 8 மணிக்கு வாக்­குப்­பதிவு தொடங்­கி­யது. மொத்­தம் ஏறக்­கு­றைய 2.6 மில்­லி­யன் வாக்­கா­ளர்­கள் வாக்­க­ளிக்­கத் தகு­தி­பெற்­றி­ருந்­த­னர். அவர்­க­ளுக்­காக 1,021 வாக்­குச்­சா­வ­டி­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

மலே­சி­யா­வில் முதன்­மு­றை­யாக 18 முதல் 21 வரைப்­பட்ட இளை­யர்­களும் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­பட்­ட­தால் 'ஜோகூர் சட்­ட­மன்­றத் தேர்­தல் 2022' வர­லாற்­றில் இடம்­பெற்­றது. கிட்­டத்­தட்ட 175,000 பேர் முதன்­மு­றை­யாக வாக்­க­ளிக்­கத் தகு­தி­பெற்­றி­ருந்­த­னர்.

மொத்­த­முள்ள 56 தொகு­தி­களைக் கைப்­பற்ற, 15 கட்­சி­களைச் சேர்ந்த 239 வேட்­பா­ளர்­கள் களத்­தில் இருந்­த­னர்.

தேசிய முன்­ன­ணி­யும் பெரிக்­கத்­தான் முன்­ன­ணி­யும் எல்­லாத் தொகு­தி­க­ளி­லும் வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யி­ருந்­தன. பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி 50 இடங்­களி­லும் பெஜு­வாங் கட்சி 42 இடங்­க­ளி­லும் வேட்­பா­ளர்­க­ளைக் கள­மி­றக்­கி­யி­ருந்­தன. 16 சுயேச்சை வேட்­பா­ளர்­களும் களத்­தில் இருந்­த­னர்.

ஆனா­லும், எதிர்­பார்த்த அள­விற்கு வாக்­கு­கள் பதி­வா­க­வில்லை. மாலை 4 மணி நில­வரப்­படி 50% வாக்­கு­களே பதி­வா­கி­யி­ருந்­தன. மாலை 6 மணி­யு­டன் வாக்­குப்­ப­திவு நிறை­வு பெற்றது.

வாக்­குச்­சா­வ­டி­களில் நெரி­சல் இல்­லா­த­தால் வாக்­கா­ளர்­கள் ஒரு சில நிமி­டங்­களில் வாக்­க­ளித்து­விட்டு வெளி­யேற முடிந்­தது.

"ஒட்­டு­மொத்த செயல்­மு­றை­யும் ஒரு நிமி­டத்­தில் முடிந்­து­விட்­டது," என்­றார் பெர்­லிங் தொகு­தி­யில் வாக்­க­ளித்த கல்­லூரி மாணவி சஞ்­சனா ஆனந்­தன், 18.

ஜோகூர் மாநி­லம் கடந்த மூவாண்­டு­களில் மூன்று முதல்­வர்­க­ளைக் கண்­டு­விட்­ட­தால் நிலை­யான அர­சாங்­கம் அமைய இளை­யர்­கள் விரும்­பு­வ­தா­கக் கூறி­னார் முதன்­மு­றை­யாக வாக்களித்த குமாரி சஞ்­சனா.

இத­ற்கிடையே, வாக்­குச்­சா­வ­டியை முன்­ன­தா­கவே மூடி­விட்­ட­தா­கக் கூறி, அதனை எதிர்த்து சிலர் அவ்­வாக்­குச்­சா­வ­டிக்கு முன்­பா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட காணொளி இணை­யத்­தில் பர­வ­லா­கி­யுள்­ளது. அதன் தொடர்­பில் புகார் எதுவும் பதிவாகவில்லை என்றும் ஆனாலும் காவல்துறை விசாரிக்கும் என்றும் ஜோகூர் காவல்துறைத் தலைவர் கம்ருல் ஸமான் மமத் கூறினார்.

ஜோகூர் சட்­ட­மன்­றத் தேர்­தலா­னது அடுத்த மலே­சி­யப் பொதுத் தேர்­த­லுக்கு முன்­னோட்­ட­மாக இருக்­கும் என்று பல­ரும் நம்­பு­கின்­ற­னர்.

முன்­ன­தாக, குறை­வான வாக்­கு­கள் பதி­வா­னால் அது தேசிய முன்­ன­ணிக்­குச் சாத­க­மாக அமைந்­து­வி­டும் என்று எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­கள் எச்­ச­ரித்து இருந்­த­னர். அவர்­கள் சொன்­னது­போ­லவே, தேசிய முன்­னணி கடந்த 2018 தேர்­த­லைக் காட்­டி­லும் இம்­முறை அதிக பெரும்­பான்மை பெற்று, ஆட்­சி­யைத் தக்­க­வைத்­துக் கொண்­டுள்­ளது.

வாக்களித்ததும் உயிர் பிரிந்தது

இத­னி­டையே, மூவா­ரில் உள்ள ஒரு வாக்­குச்­சா­வ­டிக்கு வந்த 78 வயது முதி­ய­வர் ஒரு­வர் வாக்­களித்­த­பின் திடீ­ரென மயங்கி விழுந்து உயி­ரி­ழந்­தார். நேற்­றுக் காலை 11.40 மணி­ய­ள­வில் இந்­தத் துய­ரச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.