பிரதமர்: உள்ளூரில் ஒன்றிணைய குடியேறிகள் முயல வேண்டும்

பிரதமர்: உள்ளூரில் ஒன்றிணைய குடியேறிகள் முயல வேண்டும்

2 mins read
39cb3fcb-f956-46df-8111-e38b55d7eb3b
சிங்கப்பூர் சிந்தி சங்கத்தின் 100வது ஆண்டு விழா நேற்று ஷங்கிரி-லா ஹோட்டலில் நடந்தது. அந்தச் சங்கத்தின் தலைவர் வாசுதேவ் ஏ கியலானி (வலது) பிரதமர் லீ சியன் லூங்கிற்கு சிந்தி பாரம்பரிய கலாசார சால்வையை அணிவித்து சிறப்பித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் தனது பரந்த இன சம­நி­லையைச் சீரா­கக் கட்­டிக்­காக்­கும் அதே­வே­ளை­யில், உல­கம் முழு­வ­தி­லும் இருந்து அது குடி­யே­றி­களை வர­வேற்­கிறது. அப்­படி வரும் குடி­யே­றி­கள் தங்­க­ளுக்கே உரிய தனித்தன்­மைக­ளை­யும் கலா­சா­ரங்­க­ளை­யும் கட்டிக்­காக்­கும் போதி­லும், உள்­ளூர் சமூ­கத்­தில் ஒன்­றி­ணை­யும் முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டி­யது முக்­கி­யம் என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்து இருக்­கி­றார்.

எல்­லா­ருக்­கும் பொது­வான சிங்­கப்­பூர் அடை­யா­ளத்­தை­யும் ஈடு­பாட்டு உணர்­வை­யும் பேணி வளர்ப்­ப­தன் மூலம் நாம் தொடர்ந்து பிணைப்­பு­மிக்க ஐக்­கிய மக்­க­ளாக இருந்­து­வ­ரு­வோம் என்றார் அவர்.

சிங்­கப்­பூர் சிந்தி சங்­கத்­தின் 100வது ஆண்­டு­விழா நிகழ்ச்சி நேற்று ஷங்­கிரி-லா ஹோட்­ட­லில் நடந்­தது. அதில் பேசிய பிர­த­மர், இதையே சிங்­கப்­பூ­ரில் சிந்தி சமூ­கத்­தி­னர் வெற்­றி­க­ர­மான முறை­யில் சாதித்து இருக்­கி­றார்­கள் என்று குறிப்­பிட்­டார்.

இப்­போ­தைய பாகிஸ்­தா­னிலுள்ள சிந்து பகு­தி­யி­லி­ருந்து இங்கு வந்த சிந்தி சமூ­கத்­தி­னர் தங்­க­ளு­டைய பாரம்­ப­ரி­யத்­தைப் பற்றி பெருமை கொள்­கி­றார்­கள். அதேநேரத்­தில் சிங்­கப்­பூர் சமூ­கத்­தில் அவர்­கள் ஒன்றி­ணை­கி­றார்­கள் என்­றார் பிர­த­மர்.

சிங்­கப்­பூர் சிந்­தி­களில் பல­ரும் 19ஆம் நூற்­றாண்­டின் பிற்­ப­கு­தி­யி­லும் 20ஆம் நூற்­றாண்­டின் முற்­ப­கு­தி­யி­லும் வணி­கர்­க­ளாக சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­னர்.

அந்த நாட்­க­ளின் ஆர்ச்­சர்ட் சாலை­யாக இருந்த ஹை ஸ்தி­ரீட்­டில் அவர்­கள் ஜவு­ளிக்­கடை வைத்து இருந்­தார்­கள்.

சரக்கு இறக்கி, ஏற்­றப்­படும் ஓர் இட­மாக சிங்­கப்­பூர் செயல்­பட்­டது. அதன் முழு அனு­கூ­லத்­தை­யும் சிந்­திக்­கள் பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­னர். ஜப்­பான், கொரியா, சீனா­வில் இருந்து ஜவு­ளி­களை இறக்­கு­மதி செய்து அவற்­றைத் தென்­கி­ழக்கு ஆசியா, மத்­திய கிழக்கு, அமெ­ரிக்கா போன்ற இதர வட்­டா­ரங்­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­த­னர்.

பிறகு அவர்­கள் மின்­னணு போன்ற தொழில்­து­றை­யில் ஈடு­பட்­ட­னர். இப்­போது சிந்­திக்­கள் தங்­க­ளு­டைய வணி­கத் தொழி­லுக்கு அப்­பா­லும் பல துறை­களில் விரி­வ­டைந்துள்ளனர். அர­சாங்­கத்­துறை அல்லது மருத்­து­வர், வழக்­க­றி­ஞர் அல்­லது பொறி­யி­யல் போன்ற நிபு­ணர்­க­ளாக இருந்­தா­லும் தங்­கள் துறை­யில் முத்­திரை பதித்துள்ளனர்.

கால­வோட்­டத்­தில் சிந்தி சமூ­கத்­தி­னர் சிங்­கப்­பூ­ரில் ஆழ்ந்த நீடித்து நிலைக்­கக்­கூ­டிய வகை­யில் வேர் விட்டு நாட்­டோடு சேர்ந்து வளர்ச்சி அடைந்திருக்­கி­றார்­கள். சிந்­திக்­கள் எடுத்­துக்­காட்­டான குடி­மக்­க­ளா­கத் திகழ்­கி­றார்­கள் என்றார் பிர­த­மர்.

சிங்­கப்­பூ­ர­ரின் பல இன, பல சமூக அடை­யா­ளத்தை அவர்­கள் தழு­விக்­கொண்டு இருக்­கி­றார்­கள். தங்­கள் சொந்த கலா­சா­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும் அதே வேளை­யில், இதர சமூ­கங்­கள், குழுக்­க­ளைப் பற்றி தெரிந்­து­கொண்டு இருக்­கிறார்­கள். இதர இனத்­த­வ­ரு­டன் சேர்ந்து வாழ்­வது, வேலை செய்து, விளை­யாடி மகிழ்­வது ஆகி­ய­வற்­றின் மூலம் அவர்­கள் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள் என்று திரு லீ கூறி­னார்.

கடந்த 1921ல் தோற்­று­விக்­கப்­பட்ட சிந்தி வர்த்­த­கர்­கள் சங்­கம் என்ற அமைப்பு பிறகு 2003ல் சிங்­கப்­பூர் சிந்தி சங்­கம் என்று பெயர் பெற்­றது. அது சிந்தி சமூ­கத்­திற்­கும் இதர குழுக்­க­ளுக்­கும் இடை­யில் ஒருங்­கி­ணைப்பை பேணி வளர்க்க விலை­மதிப்­பில்­லாத பங்­காற்றி இருக்­கிறது என்றும் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சிக்­கும் செழிப்­பிற்­கும் சமூ­கத்­தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கும் செறி­வூட்­டு­வ­தற்­கும் சிந்தி சமூ­க­மும் சிங்­கப்­பூர் சிந்தி சங்­க­மும் எடுத்து வரும் முயற்­சி­க­ளை­யும் தொண்­டு­க­ளை­யும் குறிப்­பிட்டு திரு லீ நன்றி தெரி­வித்­தார்.