வேலைச் சந்தையின் மீட்சி இவ்வாண்டு தொடரும்

வேலைச் சந்தையின் மீட்சி இவ்வாண்டு தொடரும்

2 mins read

2021க்கான மனிதவள அமைச்சின் தொழிலாளர் சந்தை அறிக்கை

வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்து அதி­க­ரித்து வரும் வேளை­யில், சிங்­கப்­பூர் தொழி­லா­ளர் சந்­தை­யின் மீட்சி இவ்­வாண்டு நீடிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆனால், ரஷ்யா-உக்­ரேன் போரால் ஏற்­பட்­டுள்ள நிலைத்தன்மையற்ற சூழலால் இது பாதிப்­ப­டை­ய­லாம்.

இவ்­வாண்டு தொழி­லா­ளர் சந்தை மீட்­சி­ய­டை­யும் வேகம் படிப்­ப­டி­யான ஒன்­றாக இருக்­கக்­கூ­டும். கடந்த ஆண்டு தொழி­லா­ளர் சந்தை கணி­ச­மாக மேம்­பாடு கண்­டு­விட்­டதே இதற்­குக் கார­ணம்.

மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட 2021க்கான தொழி­லா­ளர் சந்தை அறிக்­கை­யில் இது தெரி­விக்­கப்­பட்­டது.

இல்­லப் பணிப்­பெண்­க­ளைத் தவிர்த்து, கடந்த ஆண்டு ஒட்­டு­மொத்த வேலை நிய­ம­னம் 41,400 ஏற்­றம் கண்­டது. 2020ல் அது 166,600 சரிந்­தது.

உள்­ளூர்­வா­சி­க­ளி­டையே வேலை நிய­ம­னம் வலு­வான வளர்ச்சி கண்­டதே இதற்­குக் கார­ணம். அது 71,300 அதி­க­ரித்­தது. உள்­ளூர்­வா­சி­கள் அல்­லா­தோ­ரி­டையே வேலை நிய­ம­னம் 30,000 குறைந்­தது என்று அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது.

ஓமிக்­ரான் சூழ­லி­லும் கடந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் மட்­டும் வேலை நிய­ம­னம் பெற்ற ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை 47,900 கூடி­யது.

வேலை நிய­ம­னம் பெற்ற சிங்­கப்­பூர்­வா­சி­கள் அல்­லாத ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை ஈராண்­டு­களில் முதன்­மு­றை­யாக அதி­க­ரித்­தது.

கொவிட்-19 எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­பட்டு வரு­வ­தால் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வருகை அதி­க­ரித்து வரு­வதே இதற்­குக் கார­ணம்.

சிங்­கப்­பூர்­வா­சி­க­ளி­டையே வேலை நிய­மன போக்கு மாறு­பட்டு இருந்­ததை அமைச்சு தரவு காட்­டி­யது. தக­வல் தொடர்பு, சுகா­தார சமூ­கச் சேவை­கள், நிபு­ணத்­து­வச் சேவை­கள், நிர்­வாக ஆத­ர­வுச் சேவை­கள், நிதிச் சேவை­கள் போன்ற துறை­களில் வேலை நிய­ம­னம் அதி­க­ரித்­தது.

என்­றா­லும், ஹோட்­டல், விமா­னப் போக்­கு­வ­ரத்து, கலை­கள், பொழு­து­போக்கு, கேளிக்கை துறை­களில் வேலை நிய­ம­னம் மித­மா­கக் குறைந்­தது. கடந்த ஆண்­டின் பெரும்­ப­குதி பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்டு இருந்­ததே அதற்­குக் கார­ணம்.

இதற்­கி­டையே, கட்­டு­மானம் தவிர்த்து மற்ற துறை­களில் சிங்­கப்­பூர்­வா­சி­கள் அல்­லா­தோ­ரி­டையே வேலை நிய­ம­னம் குறைந்­தது. எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால், கட்­டு­மா­னத் துறை­யில் மட்­டும் கடந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் வேலை நிய­ம­னம் கூடி­யது.

எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் வைத்­தி­ருந்­தோ­ரின் எண்­ணிக்கை 15,300ம் எஸ்-பாஸ் வைத்­தி­ருப்­போ­ரின் எண்­ணிக்கை 12,200ம் குறைந்­ததே கட்­டு­மா­னம் தவிர்த்து மற்ற துறை­களில் வேலை நிய­ம­னம் குறை­யக் கார­ணம்.

வேலை அனு­ம­திச் சீட்டு, இதர வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருந்­தோர் எண்­ணிக்­கை­ 2,400 குறைந்துள்ளது. இருப்பினும், இது குறைவான எண்ணிக்கையே.