உக்ரேனில் உக்கிரமடையும் போர்; தலைநகரில் குடியிருப்புக் கட்டடத்தின்மீது தாக்குதல்

உக்ரேனில் உக்கிரமடையும் போர்; தலைநகரில் குடியிருப்புக் கட்டடத்தின்மீது தாக்குதல்

2 mins read
7b7aed03-89b9-4562-a4ea-aa1205cb6da2
தலைநகர் கியவ்வில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் காயமுற்ற குடியிருப்பாளரை அழைத்துச் செல்லும் மருத்துவ ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

உக்ரேனியத் தலைநகர் கியவ்வில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின்மீது ரஷ்யப் படை நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். தலைநகரின் வேறொரு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டாவது நபர் கொல்லப்பட்டார் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

கியவ்வில் உள்ள விமானத் தொழிற்சாலையில் மூன்று ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதில் அது தீப்பற்றிக்கொண்டது.

குடி­மக்­க­ளைக் குறி­வைத்து தாக்­கு­வ­தா­கக் கூறப்­ப­டு­வதை ரஷ்யா நிரா­க­ரித்­துள்­ளது. உக்­ரே­னில் தான் மேற்­கொள்­வது 'சிறப்பு நட­வ­டிக்கை' என்று ரஷ்ய அதி­பர் மாளிகை வர்­ணிக்­கிறது. எனி­னும், போர் தொடுப்­ப­தற்கு இது அடிப்­படை ஆதா­ர­மற்ற கார­ணம் என்று உக்­ரே­னும் மேற்­கத்­திய நட்பு நாடு­களும் கூறு­கின்­றன.

உக்­ரே­னில் ரஷ்­யப் படை­கள் தொடர் தாக்­கு­தல்­களை நடத்­தி­வரும் வேளை­யில், இரு நாடு­களுக்­கும் இடையே நான்கு சுற்று பேச்சு­வார்த்தை நேற்று நடத்­தப்­பட்­டது.

துறை­முக நக­ரான மரி­ய­போ­லி­லும் ரஷ்யப் படைகள் இடை­விடாது குண்­டு­மழை பொழிந்து வரு­கின்­றன. அந்­ந­க­ரில் மட்­டும் கிட்­டத்­தட்ட 2,200 பேர் கொல்­லப்­பட்­டு­விட்­ட­தாக உள்­ளூர் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

உக்­ரே­னிய அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்­கிக்­கும் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னுக்­கும் இடையே நேரடி பேச்­சு­வார்த்தை நடத்த உக்­ரேன் பல­முறை வலி­யு­றுத்தி வந்­துள்­ளது.

குறிப்­பிட்ட சில விஷ­யங்­க­ளைப் பற்றி பேச அத்­த­கைய ஒரு சந்­திப்­புக்கு ரஷ்ய அதி­பர் மாளிகை மறுப்பு தெரி­விக்­காது என ரஷ்யா முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தது. என்­றா­லும், அது­கு­றித்த மேல்­வி­வ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

நேட்டோ உறுப்பு நாடான போலந்து எல்லை அருகே உள்ள உக்­ரே­னிய ராணு­வத் தளத்­தில் ஏவு­க­ணைத் தாக்­கு­தல்­களை ரஷ்யா நேற்று முன்­தி­னம் நடத்­தி­யது. அதில் குறைந்­தது 35 பேர் கொல்­லப்­பட்­ட­து­டன் 134 பேர் காய­முற்­ற­னர். ரஷ்­யா­வு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த உக்­ரேன் இணக்­கம் தெரி­வித்து இருந்­தா­லும், போரில் சர­ண­டைய மறுத்­துள்­ளது. போர் தொடங்­கி­ய­தில் இருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் கொல்­லப்­பட்­ட­து­டன் 2.5 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் உக்­ரே­னை­விட்டு வெளி­யே­றி­யுள்­ள­னர். ரஷ்யா-உக்­ரேன் பேச்­சு­வார்த்­தை­களில் நேர்­ம­றை­யான மாற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக திரு புட்­டின் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறி­யிருந்­தார். ஆனால், அது­பற்றி அவர் விவ­ரிக்­க­வில்லை.

மேலும் செய்­தி­கள் பக்­கம் 8ல்