சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக 10,000க்கு கீழே குறைந்தது.
திங்கட்கிழமை (மார்ச் 14) அன்று 9,042 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாயின.
சுகாதார அமைச்சு இதைத் தெரிவித்தது.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதமும் தொடர்ந்து ஒன்றுக்குக் குறைவாக இருந்தது. அந்த விகிதம் திங்கள் அன்று 0.84ஆக இருந்தது.
ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு இந்த விகிதம் இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறை.
ஞாயிற்றுக்கிழமை அன்று வாராந்திரத் தொற்றுப் பரவல் 0.87 ஆக இருந்தது.
வாரந்திரத் தொற்றுப் பரவல் விகிதம் ஒன்றுக்கு மேல் இல்லை என்றால் தொற்றுப் பரவல் குறையவில்லை என்று பொருள்படும்.
மேலும், திங்கள் அன்று எட்டு பேர் உயிர் இழந்தனர். ஒப்புநோக்க, ஆறு பேர் உயிர் இழந்ததாக ஞாயிறு அன்று கூறப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 37 பேர் சிகிச்சை பெற்றனர்; 171 பேருக்கு செயற்கை உயிர்வாயு சிகிச்சை தேவைப்பட்டது.

