உச்சத்தில் உக்ரேன் போர்

உச்சத்தில் உக்ரேன் போர்

2 mins read
692c42a4-b659-4200-a241-43c29cebba72
-

உக்­ரே­னில் கடந்த 20 நாள்­க­ளாக தாக்­கு­தல் நடத்தி வரும் ரஷ்­யப் படை­கள் நேற்று இரவு 9 மணி அள­வில் (பத்­தி­ரிகை அச்­சுக்­குச் சென்­ற­போது) தலை­ந­கர் கியவ்வை நேற்று சுற்றி வளைத்­து­விட்­டன.

தலை­ந­க­ரைக் கைப்­பற்ற தாக்­கு­த­லைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்ள ரஷ்யப் படைகள், குடி­யி­ருப்­பு­கள், மருத்­து­வ­ம­னை­கள், பள்ளிகள் என்று நாட்­டின் முக்­கிய கட்­ட­டங்­கள் மீதும் ஷெல் குண்டுகளை வீசுகின்றன.

கியவ்­வி­லுள்ள 16 மாடிக் குடி­யி­ருப்பு கட்­ட­டத்­தின் மீது நேற்று முன்­தி­னம் குண்டு போடப்­பட்­ட­தில் இரு­வர் கொல்­லப்­பட்­ட­னர், குறைந்­தது 27 பேர் மீட்­கப்­பட்­ட­னர் என்று உக்­ரேன் அவ­ச­ர­கால சேவை படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது (படம்). அப்­பகு­தி­யி­லுள்ள மற்­றோர் அடுக்­கு­மா­டி­யும் தாக்­கு­லுக்­குள்­ளா­னது. கியவ்வில் நாளை வரை பொது­மு­டக்­கம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பொது­மக்­கள் பதுங்கு குழி­களை விட்டு வெளியே வர வேண்­டாம் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அந்நக­ரின் மூன்று மில்­லி­யன் மக்­களில் பாதிக்­கும் மேலான­வர்­கள் நக­ரை விட்டு வெளி­யேறி விட்டனர்.தலை­ந­க­ரின் தெற்கே உள்ள சாலை­கள் மட்­டுமே திறக்­கப்­பட்­டுள்­ளன. சோத­னைச் சாவ­டி­கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்­கள் உண­வுப் பொருள்­க­ளை­யும் மருந்­து­க­ளையும் சேமித்து வைக்கின்றனர்.

போர் நிறுத்­தம் தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­கள் பலன் தருவதாகத் தெரிய வில்லை. மேற்­கி­லி­ருந்து விலகி, ரஷ்­யா­வின் ஆத­ர­வு­டன் பிரிந்த பகு­தி­களை உக்­ரேன் அங்­கீ­க­ரிக்க வேண்­டும் என்­கிறது ரஷ்யா. "அமைதி, உட­னடி போர்­நி­றுத்­தம், ரஷ்­யப் படை­கள் வெளி­யேற வேண்­டும்" என்­கிறது உக்­ரேன்.

ரஷ்­யா­வுக்­கும், அதி­பர் புட்­டி­னுக்­கும் பல நாடு­கள் கடு­மை­யான தடை­க­ளை­ விதித்து, எதிர்ப்­பை­யும் தெரி­வித்து வரும் நிலையிலும் போர் தொடர்கிறது.

மேலும் செய்திகள் பக்கம் 8