பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வைக் காரணமாக வைத்து விலைகளை ஏற்றும் நிறுவனங்கள் தொடர்பான விவகாரத்தைக் கவனிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நியாயமற்ற வகையில் லாபம் ஈட்டுவதற்கு எதிரான இந்தக் குழுவில் 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அத்தியாவசியப் பொருள்
களின் விலையையும் சேவைகளின் கட்டணத்தையும் நியாயமற்ற வகையில் ஏற்றுவதன் மீது குழு கவனம் செலுத்தும். குறிப்பாக, சிங்கப்பூர் குடும்பங்கள் பயன்
படுத்தும் அல்லது பரவலாக நுகரப்படும் முட்டை, கோழி இறைச்சி போன்ற அன்றாடப் பொருள்
களின் விலைகளை அது கண்காணிக்கும்.
வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் இக்குழுவிற்கு தலைமை ஏற்றுள்ளார். அதன் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு தொழிற்கூடங்கள், அடித்தள அமைப்புகள் போன்றவற்றின் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜிஎஸ்டியைக் காரணம் காட்டி விலை ஏற்றுவது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கவும் சந்தேகத்திற்கு இடமான வர்த்தக நிறுவனம் மீது புகார் தெரிவிக்கவும் பல்வேறு தளங்கள் இருக்கும் என்று திருவாட்டி லோ கூறினார்.
சென்ற மாதம் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இப்படி ஒரு குழு மீண்டும் அமைக்கப்படும் என அறிவித்தார்.
1994ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகம் கண்டபோது லாபவேட்டைக்கு எதிரான குழு முதன்
முதலாக அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டபோது, இக்குழு மீண்டும் நிறுவப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டது.
தற்போது 7 விழுக்காடாக உள்ள ஜிஎஸ்டி 2023 ஜனவரி 1 முதல் 8 விழுக்காடாகவும் 2024 ஜனவரி 1 முதல் 9 விழுக்காடாகவும் உயர்த்தப்பட உள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த பல்வேறு அமைப்புகளுடன் இக்குழு பங்காளித்துவத்தை ஏற்படுத்தும் என்று அது நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூர் போட்டித்தன்மை மற்றும் பயனீட்டாளர் ஆணையம், மக்கள் கழகம், சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் போன்றவை அந்த அமைப்புகள்.
ஜிஎஸ்டியை காரணம் காட்டி, வேண்டுமென்றே விலையை உயர்த்தும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது பற்றியும் குழு முடிவு எடுக்கும். இருப்பினும் நடவடிக்கை என்ற பெயரில் நிறுவனங்கள் மீது தேவையற்ற சுமையை குழு ஏற்படுத்தாது என்று திருவாட்டி லோ கூறினார்.
ஜிஎஸ்டி உயர்வைக் காரணம் காட்டி விலையை ஏற்றுவதன் மீது கவனம்

