விண்ணை முட்டிய விலைவாசி; இலங்கை மக்கள் கொதிப்பு

விண்ணை முட்டிய விலைவாசி; இலங்கை மக்கள் கொதிப்பு

1 mins read
e9562c5f-906f-4376-9b7a-727a19b5ef14
-

தாங்க முடி­யாத விலை­வாசி ஏற்­றத்­தைக் கண்­டித்து இலங்­கை­யில் இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் ஆர்ப்­பாட்­டம் நடந்தது. திங்­கள்­கி­ழமை தொடங்­கிய போராட்­டம் மறு­நாள் தீவி­ர­ம­டைந்­தது.

தலை­ந­கர் கொழும்­பு­வில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் திரண்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அதி­பர் கோத்­த­பய ராஜ­பக்சே பதவி வில­கக் கோரி முழக்­கம் எழுப்­பி­னர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் ஒரு பிரி­வி­னர் அதி­பர் மாளி­கைக்கு வெளியே திரண்டு எதிர்ப்­புக் குரல் எழுப்­பி­னர்.

வர­லாறு காணாத ஏற்­றத்­தால் உண­வுக்­குப் பஞ்­சம் ஏற்­படும் நிலையை உணர்த்­தும் வகை­யில் ஆர்ப்­பாட்­டத்­தில் ரொட்­டிகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எதிர்த்தரப்புத் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தை அகற்றுவதற்கான தொடக்க பிரசாரம் இது என்றார்.