இந்தியர்களை சிங்கப்பூருக்கு மீண்டும் ஈர்க்க சென்னையில் தொடங்கிய இயக்கம்

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணிகளை ஈர்க்கு நோக்கில் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் இயக்கம் ஒன்றைத் தொடங்கி உள்ளது. 

'சிங்கப்பூர் ரீஇமேஜின்' சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 17) அன்று இயக்கம் தொடங்கப்பட்டது. 

அதன் பொருட்டு சென்னையின் மிகப் பெரிய கடைத்தொகுதிகளில் ஒன்றான ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி கடைத்தொகுதியில் கலைக்கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழர் மரபு, பெரனாக்கான் வடிவங்கள் போன்ற சிங்கப்பூரின் கலாசார அம்சங்கள் அதில் அடங்கும். 

மூன்று வாரங்களுக்கு அது கடைத்தொகுதியில் காட்சிக்கு வைக்கப்படும்.

வரும் மாதங்களில் மற்ற வெவ்வேறு இந்திய நகரங்களில் கலைக் கண்காட்சி நடத்தப்படும்.  

சுமார் 1.4 மில்லியன் இந்தியக் குடிமக்கள் 2019ல் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் பெரும்பங்கு வகித்தனர் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் இந்தியா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியாவுக்கான வட்டார இயக்குநர் ஜி.பி. ஸ்ரீதர் கூறினார். 

கொவிட்-19 தொற்று சூழலில் இந்த எண்ணிக்கை குறைந்தது. 

ஆனால் இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தடுப்பூசிப் பயணப் பாதை தொடங்கப்பட்ட பின்னர், பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக திரு  ஸ்ரீதர் கூறினார். 

இந்தச் செய்தி பற்றிய மேல்விவரத்தை தமிழ் முரசின் மார்ச் 18 வெள்ளிக்கிழமை அச்சுப் பிரதியில் படிக்கலாம்.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!