15 அம்ச அமைதிப் பேச்சில் கணிசமான முன்னேற்றம்; புட்டினை போர்க் குற்றவாளி என்றார் பைடன் உக்ரேன்: சமரசப் பேச்சு நம்பிக்கை

15 அம்ச அமைதிப் பேச்சில் கணிசமான முன்னேற்றம்; புட்டினை போர்க் குற்றவாளி என்றார் பைடன் உக்ரேன்: சமரசப் பேச்சு நம்பிக்கை

2 mins read
fd50aee2-03ad-46de-ad56-36d94410976c
உக்ரேனின் கியவ்வில் ரஷ்யத் தாக்குதலுக்கு உள்ளான தன் வீட்டில் சேதம் அடையாமல் தப்பிய பொருள்களை டெட்டியானா என்ற இம்மாது சேகரிக்கிறார். இத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மூவர் காயமடைந்தனர். படம்: இபிஏ -

உக்­ரே­னும் ரஷ்­யா­வும் சம­ரசப் பேச்சு நடத்தி வரு­வ­தா­க­வும் அதில் அமை­திக்­கான நம்பிக்கை அதி­க­மாகி இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது.

தற்­கா­லிக ஏற்­பா­டாக 15 அம்ச அமைதித் திட்­டம் முன்­வைக்­கப்­பட்டு இருக்­கிறது. அதன் பேரில் உக்­ரே­னும் ரஷ்­யா­வும் பேச்சு நடத்தி வரு­கின்­றன. அந்­தப் பேச்­சில் கணி­ச­மான முன்­னேற்­றம் ஏற்­பட்டு இருக்­கிறது என்று ஃபைனான்­ஷியல் டைம்ஸ் நேற்று தெரி­வித்­தது.

உக்­ரேன் நடு­நி­லையைக் கடை­ப்பி­டிக்கப் போவ­தாக அறி­வித்து தனது ஆயு­தப்­படை­க­ளுக்கு வரம்பு விதிக்க ஒப்­புக்­கொள்ளும் பட்­சத்­தில், ரஷ்யா தன் படை­களை மீட்­டுக்­கொள்­ளும். போர் நிறுத்­தம் அறி­விக்­கப்­படும் என்ற ஏற்­பா­டு அந்த 15 அம்­சத் திட்­டத்­தில் இருக்கிறது என்று பேச்­சு­வார்த்­தை­யில் சம்­பந்­தப்­பட்ட ஐந்து பேரை மேற்­கோள்காட்டி ஃபைனான்­ஷியல் டைம்ஸ் குறிப்­பிட்டு இருக்­கிறது.

நேட்டோ அமைப்­பில் சேர்­வ­தற்­கான தனது விருப்­பத்தை உக்­ரேன் கைவிட்­டு­வி­டும்; அமெ­ரிக்கா, பிரிட்­டன், துருக்கி போன்ற நேச நாடு­க­ளின் பாது­காப்­புக்குக் கைமா­றாக எந்­த­வொரு வெளி­நாட்டு ராணுவத் தளத்­தை­யும் அல்­லது ஆயு­தங்­களை­யும் உக்­ரேன் வைத்­துக்கொள்­ளாது என்­ப­தும் அந்த அமை­தித் திட்­டத்­தின் அம்­சங்­க­ளாக இருக்­கின்­றன.

அமை­திப் பேச்­சின் முக்­கிய உலக நடு­வ­ராக இஸ்­ரே­லி­யப் பிர­த­மர் பென்­னட் உதவி வரு­வதாகவும் ஃபைனான்­ஷி­யல் டைம்ஸ் குறிப்­பிட்டுள்­ளது. இவர் மார்ச் 5ஆம் தேதி திடீ­ரென ரஷ்ய பய­ணம் மேற்­கொண்­டார். தொடர்ந்து இரு தரப்பினரோடும் பேச்சு நடத்தி வரு­கி­றார்.

15 அம்ச அமை­தித் திட்­டம் பற்­றிய தக­வல் வெளி­யாகி இருந்­தா­லும் ரஷ்­யாவுக்­கும் உக்­ரே­னுக்­கும் இடை­யில் சாத்­தி­ய­மான அமைதி உடன்­பாடு பற்றி இப்­போது எதை­யும் சொல்­வ­தற்­கில்லை என்று ரஷ்ய அதி­பர் மாளி­கைப் பேச்­சா­ளர் டிமிட்ரி செகோவ் தெரி­வித்­தார்.

பேச்சு­வார்த்தை பற்றி கருத்துக் கூறிய உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி, அவை நடை­மு­றைக்கு உகந்த நிலையை எட்டி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

அதே­வே­ளை­யில், இப்­போது விவா­திக்­கப்­படும் யோச­னை­கள் கிட்­டத்­தட்ட உடன்­பாட்டை நெருங்­கி­விட்­டதாக ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சர் லாவ்­ரோவ் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், உக்­ரேன் மீது பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதி படை­யெ­டுத்த ரஷ்யா, கடும் எதிர்த் தாக்குதல் கார­ண­மாக வேக­மாக வெற்றியைச் சாதிக்க முடி­ய­வில்லை என்று பிரிட்­டிஷ் ராணுவ வேவுத்­துறை நேற்று குறிப்­பிட்­டது. ரஷ்­யா­வின் ஊடு­ரு­வல் பல முனை­களி­லும் கிட்­டத்தட்ட நிலைகுத்­திப் போய்­விட்­டது. ரஷ்­யப் படை­க­ளுக்கு கடுமை­யான சேதங்­கள் ஏற்­பட்டு வரு­கின்­றன. தரை, கடல், ஆகா­யம் வழி­யாக ரஷ்ய ராணு­வம் எளிதாக முன்­னேற முடி­ய­வில்லை என்று அது கூறியது.

உக்­ரேன் கடு­மை­யாக எதிர்க்­கிறது. ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­கிறது என்று பிரிட்­டிஷ் தற்­காப்பு அமைப்பு தெரி­வித்­தது.

உக்­ரே­னின் பெரும் பகு­தி­களும் பெரும் நகர்­களும் இன்­ன­மும் உக்­ரே­னின் கைகளிலேயே இருப்பதாக பிரிட்டிஷ் ராணுவ வேவுத்­துறை குறிப்பிட்டது.

இத­னி­டையே, உக்­ரே­னில் ரஷ்யா நடத்தும் தாக்­குத­லால் ஏற்­பட்ட பேரழிவுகளை, உயி­ரு­டற்சேதத்தை தொலைக்­காட்­சி­யில் பார்த்த அமெ­ரிக்க அதி­பர் பைடன், ரஷ்ய அதி­பர் புட்­டின் ஒரு போர்க் குற்­ற­வாளி என்று கூறி­னார். அமெ­ரிக்க அதி­பர் இப்படி கூறி­யி­ருப்­பது இதுவே முதல் முறை என்பது குறிப்­பி­டத்­தக்­கது.

பக்­கம் 8ல் மேலும் செய்தி