புதிய மருத்துவ நிலையம்

புதிய மருத்துவ நிலையம்

2 mins read
558e2ca5-ad4b-4319-a55c-9e0cc4ff9e48
புதிய நிபுணத்துவ மருத்துவப் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ள கண் சிகிச்சைப் பிரிவு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அங் மோ கியோவில் டான் டோக் செங் மருத்துவமனை தொடங்கியது

டான் டோக் செங் மருத்­து­வ­மனை, அங் மோ கியோ அவென்யூ 8ல் புதிய நிலை­யம் ஒன்­றைத் தொடங்கி இருக்­கிறது. இதன் மூலம் அப்­ப­குதி குடி­யி­ருப்­பா­ளர்­

க­ளுக்கு நிபு­ணத்­துவ மருத்­துவ வல்­லு­நர்­க­ளின் சிகிச்­சை­யும் பரா­ம­ரிப்­பும் இனி கிடைக்­கும். நேற்று நடை­பெற்ற அந்­தப் புதிய சிறப்பு மருத்­து­வப் பரா­ம­ரிப்பு நிலை­யத் திறப்பு நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் லீ சியன் லூங் கலந்­து­கொண்­டார்.

இந்த நிலை­யம், நிபு­ணத்­துவ மருத்­துவ வல்­லு­நர்­க­ளின் பரா­ம­ரிப்­பை­யும் சேவை­க­ளை­யும் குடி­மக்­க­ளின் வீட்­ட­ருகே கொண்­டு­வந்­துள்­ள­தா­க­வும் தொடர்ந்து மருத்­து­வப் பரா­ம­ரிப்பு கிடைக்­கு­மாறு செய்­வது இதன் நோக்­கம் என்­றும் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

"அங் மோ கியோ­வில் வசிக்­கும் முதி­ய­வர் யாருக்­கா­வது கண்­பார்வை மங்­கி­விட்­டால் அவர் பரி­சோ­த­னைக்­காக, ஆலோ­ச­னைக்­காக, சிகிச்­சைக்­காக, தொடர் கவ­னிப்­புக்­காக டான் டோக் செங் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல வேண்­டிய நிலை இருந்­தது.

"இப்­போது புதிய நிலை­யம் திறக்­கப்­பட்டு இருப்­ப­தால் அவர், தான் வசிக்­கும் இடத்­திற்கு அரு­கி­லேயே மருத்­து­வச் சிகிச்­சையை, கண் அறு­வைச் சிகிச்­சையை, சிகிச்­சைக்­குப் பிந்­திய பரி­சோ­த­னை­க­ளைச் செய்­து­கொள்ள முடி­யும்," என்­றும் திரு லீ கூறி­னார்.

ஒட்­டு­மொத்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உத்­தி­யை­யும் கொள்கை

களை­யும் அர­சாங்­கம் தொடர்ந்து மறு­ஆய்வு செய்­து­வ­ரு­வ­தா­க­வும் புதிய, சிறந்த வச­தி­களை ஏற்

படுத்தி வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். பெருங்­கு­டல் பரி­சோ­தனை, வயிறு பரி­சோ­தனை, எலும்பு தொடர்­பான உடற்­ப­யிற்சி மறு­வாழ்வு சிகிச்சை உள்­ளிட்ட இதர சிகிச்சை வச­தி­களும் புதிய நிலை­யத்­தில் கிடைக்­கும்.

நீரி­ழிவு சிகிச்சை, கண் சிறப்பு அறுவை சிகிச்சை, காது கேளாமை தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்­கான சிகிச்சை ஆகிய, தனது மூன்று மருந்­த­கங்­களில் கிடைக்­கக்­கூ­டிய முக்­கி­ய­மான சிகிச்சை வச­தி­களை தான் திருத்தி வடி­வ­மைத்து இருப் பதாக டான் டோக் செங் மருத்­து­வ­மனை கூறி­யது.

இதனை அடுத்து அந்த சிகிச்­சை­களை அங் மோ கியோ குடி­யி­ருப்பு வட்­டார மக்­கள் புதிய நிலை­யத்­தில் எளி­தா­கப் பெற­லாம்.

அவை அவர்­க­ளுக்­குக் கட்­டுப் படி­யா­கக்­கூ­டி­ய­தா­க­வும் பொருத்­த­மா­ன­தா­க­வும் இருக்­கும் என்று மருத்­து­வ­மனை கூறி­யது.

டான் டோக் செங் மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் இந்­தப் புதிய நிலை­யத்தை நிர்­வ­கிப்­பார்­கள். அவர்­களில் சிலர் இந்த நிலை­யத்­தி­லும் நொவி­னா­வில் உள்ள இந்த மருத்­து­வ­ம­னை­யி­லும் மாறி மாறி பணி­யாற்­று­வர்.

சிங்­கப்­பூ­ரில் 'நல­மிக்க எஸ்ஜி' என்ற ஓர் உத்தி பற்றி அண்­மை­யில் அறி­விக்­கப்­பட்­டது. மருத்­துவ மனையை அதி­கம் சார்ந்து இருக்­கா­மல் முன்­னரே நோய்­க­ளைத் தவிர்த்­துக்­கொள்­ளக்­கூ­டிய, தாக்­குப் பிடிக்­கக்­கூ­டிய ஒரு பரா­ம­ரிப்பு பாணிக்கு மாறிக்­கொள்ள இந்த உத்தி வகை செய்­கிறது.

இந்த உத்­தியை ஒட்டி மக்­க­ளின் உடல்­ந­லனை நிர்­வ­கிப்­ப­தில் பல­துறை மருந்­த­கங்­க­ளை­யும் தனி­யார் மருத்­து­வர்­க­ளை­யும் இந்­தப் புதிய நிலை­யம் அதி­கம் ஈடு­ப­டுத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.