மலேசிய ஆளும் கட்சியான அம்னோவின் தலைவர் அகமது ஸாஹித் ஹமிடி, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தவேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பை நெருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் அம்னோவுக்கு மக்கள் அளித்த ஆதரவை உடனடியாகப் பயன்
படுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு என அவர் நேற்று கட்சியின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசியபோது குறிப்பிட்டார். அந்தக் கூட்டத்தில் 5,571 அம்னோ உறுப்பினர்கள் நேரடியாகக் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைத் திடீரென்று கலைப்பது என்பது மாமன்னரின் முடிவைப் பொறுத்தது என்று பிரதமர் இஸ்மாயில் கூறியுள்ளார்.
"நாமாக ஒரு தேதியை முடிவு செய்து செயல்பட்டால் ஆட்சிப் பொறுப்பை நாம் எடுத்துக்கொண் டதாக மாமன்னர் கருதுவார். எனவே பொறுத்திருப்போம்," என அவர் கூறினார். ஆனால், முன்னதாக, திரு ஸாஹித் கூறு கையில், "ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற ரீதியில் முடிவைத் தீர்மா னிக்கும் அதிகாரம் அம்னோவுக்கு உண்டு என்றார்.

