'போதைப் பொருள் தடுப்பு உத்தி பலனளிக்கிறது'

'போதைப் பொருள் தடுப்பு உத்தி பலனளிக்கிறது'

2 mins read

போதைப்­பொ­ருள் புழக்­கத்­துக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் பரந்த அள­வி­லான உத்தி வெற்­றி­க­ர­மா­ன­தாக இருந்து வந்­துள்­ளது என்று இரண்­டா­வது உள்­துறை அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்து இருக் கிறார். அந்த உத்தி கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் போதைப்­பொ­ருள் நில­வ­ரம் கட்­டுப்­பாட்­டில் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

ஐநா போதைப்­பொ­ருள் ஒழிப்பு ஆணை­யத்­தின் 65வது கூட்­டத்­தில் நேற்று மெய்­நி­கர் வாயி­லா­கப் பேசிய திரு­வாட்டி டியோ, சிங்­கப்­பூ­ரின் உத்­தி­யில் வலு­வான சமூக பங்­கா­ளித்­து­வ­மும் பொது­மக்­கள் ஆத­ர­வும் முக்­கிய அம்­ச­மாக பின்­னிப்­பி­ணைந்து இருப்­ப­தா­கக் கூறி­னார்.

முன்­த­டுப்பு போதனை, கடு­மை­யான சட்­டங்­கள், தீவி­ர­மாக சட்­டங்­களை அம­லாக்­கு­வது, ஆற்­றல் மிகுந்த மறு­வாழ்வு முயற்­சி­கள் ஆகி­ய­வற்­றின் வழி­யாக போதைப்­பொ­ருள் விநி­யோ­கத்­தை­யும் அதற்­கான தேவை­யை­யும் குறைப்­பதே சிங்­கப்­பூர் உத்­தி­யின் நோக்­கம் என்று அவர் விளக்­கி­னார்.

ஆஸ்­தி­ரி­யா­வின் வியன்னா நக­ரில் மார்ச் 14 முதல் 18ஆம் தேதி வரை அந்த ஐநா ஆணைய நிகழ்ச்சி நேர­டி­யா­க­வும் இணை­யம் வழி­யும் நடந்­தது. தொடர்பு தக­வல் அமைச்­ச­ரு­மான திரு­வாட்டி டியோ அதில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூர் குழு­விற்­குத் தலைமை ஏற்­றார்.

சிங்­கப்­பூ­ரில் பெரும்­பா­லான இளை­யர்­கள்- அதா­வது ஏறக்­கு­றைய 80 விழுக்­காட்­டி­னர் போதைப்­பொ­ரு­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­து­க­ளைப் பற்றி புரிந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.

போதைப்­பொ­ருள் புழக்­கத்தை அறவே சகித்­துக்­கொள்­வ­தில்லை என்ற அர­சாங்­கத்­தின் நிலைப்­பாட்­டிற்கு அவர்­கள் ஆத­ரவு தரு­கி­றார்­கள் என்­பது மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு அண்­மை­யில் நடத்­திய ஆய்­வு­கள் மூலம் தெரி­ய­வந்திருக்­கிறது. இதனை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 1990களில் ஒவ்­வோர் ஆண்­டும் கைதான போதைப்­பு­ழங்­கி­ களின் எண்­ணிக்கை 6,000க்கும் அதி­க­மாக இருந்­தது. இது இன்­றைய தேதி­யில் கிட்­டத்­தட்ட 3,000 ஆகக் குறைந்து இருக்­கிறது என்­ப­தை­யும் திரு­வாட்டி டியோ சுட்­டி­னார். போதைப் புழக்­கத்­தைக் கைவிட்டு­ விட்டு மீண்­டும் அந்­தப் பழக்­கத்­திற்­குத் திரும்­பு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் குறைந்து இருக்­கிறது என்­றார் அவர்.

திரு­வாட்டி டியோ போதைப்­பொ­ருள் புழக்­கத்­திற்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் பல­முனை உத்­தியை தனது உரை­யில் கோடிட்டுக் காட்­டி­னார்.

உல­க­ள­வி­லான போதைப்­பொ­ருள் பிரச்­சினை இன்­ன­மும் ஒரு சவா­லா­கவே நீடிக்­கிறது என்று குறிப்­பிட்ட திரு­வாட்டி டியோ, அந்­தச் சவா­லைச் சமா­ளிக்க வேண்­டு­மா­னால் பல நாட்டு அர­சாங்­கங்­களும் உள்­நாட்டு, அனைத்­து­லக முயற்­சி­களை முடுக்­கி­விட வேண்­டும் என்று வலி­யு­றுத்தி கூறி­னார். ஐநா போதைப்­பொ­ருள் ஒழிப்பு ஆணை­யத்­தில் 2024 முதல் 2027 வரை உறுப்­பி­ன­ராக இருக்க சிங்­கப்­பூர் முயற்சி செய்­கிறது. இதற்கு ஆத­ரவு அளிக்­கும்­படி உறுப்­பி­னர்­களை திரு­வாட்டி டியோ கேட்­டுக்கொண்­டார்.