திடீர் தேர்தல்; மலேசியப் பிரதமர் ஆலோசனை

திடீர் தேர்தல்; மலேசியப் பிரதமர் ஆலோசனை

2 mins read
869f92b5-210a-4075-93e5-195c7b9ddd40
அம்னோ உச்சநிலை மாநாட்டில் முன்னாள் பிரதமர் நஜிப்பும் இந்நாள் பிரதமர் இஸ்மாயிலும். படம்: நஜிப் ஃபேஸ்புக் -

மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், நாடா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தல் நடத்­து ­வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரி­வித்­துள்­ளார்.

அவ­ரது அம்னோ கட்சியின் தலைமை பொதுத்தேர்­தலை நடத்த விரும்­பு­கிறது.

அண்­மைய நான்கு நாள் கட்சி மாநாட்­டில் பேசிய அம்னோ தலை­வர்­கள் பலர் தேர்­த­லுக்கு அழைப்பு விடுத்­த­னர்.

இந்த நிலை­யில் அம்னோ கட்­சி­யின் உத­வித் தலை­வ­ரு­மான பிர­த­மர் இஸ்­மா­யில், 5,500 கட்­சிப் பேரா­ளர்­கள் கலந்­து­கொண்ட மாநாட்டில் தேர்­த­லுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டதை நன்கு அறிந்து உள்ளதாகத் தெரி­வித்­தார்.

"இந்த முக்­கிய விவ­கா­ரம் கட்­சி­யின் ஐந்து உயர் மட்­டத் தலை­வர்­க­ளுடன் விவா­திக்­கப்­படும் என்று உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றேன்," என்றார் அவர்.

அம்னோ கட்­சித் தலை­வர் அஹ­மட் ஸாஹிட் ஹமிடி, துணைத் தலை­வர் முஹ­மட் ஹசன் மற்­றும் அவர் உட்­பட மூன்று உதவி தலை­வர்­களை அவர் குறிப்­பிட்டு பேசி­னார்.

இதே விவ­கா­ரம் அம்னோ உச்ச மன்­றத்­தி­லும் அமைச்­ச­ர­வை­யி­லும் விவா­திக்­கப்­படும். பின்­னர் அது பற்­றிய முடிவு மாமன்­ன­ரி­டம் தெரி­விக்­கப்­படும் என்று அவர் தெரி­வித்­தார்.

திரு இஸ்­மா­யில் ஏழு மாதங்­களே ஆன அர­சாங்­கத்­துக்கு தலைமை வகித்து வரு­கி­றார்.

இதற்கு முன்பு பொதுத்­தேர்­தல் நடத்­து­வ­தற்கு அவர் எதிர்ப்பு தெரி­வித்­தார்.

ஆனால் கட்சி மாநாட்­டில் தேர்­தல் நடத்­தியே ஆக வேண்­டும் என்ற குரல் ஓங்கி ஒலித்­த­தால் அதற்கு அவர் அடிபணிய வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ளது.

திரு இஸ்­மா­யில் பேரா­ளர்­க­ளி­டம் உரை­யாற்­றி­ய­போது தேர்­தல் பற்றி குறிப்­பி­டா­மல் அர­சாங்­கத்­தின் புதிய முத­லீ­டு­கள் மற்­றும் புதிய கொள்­கை­க­ளைப் பற்­றியே பேசி­னார்.

அடுத்த ஆண்டு ஜூலை வரை­யில் பொதுத் தேர்­தல் நடத்த அரசுக்கு அவகாசம் உள்ளது.