ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றி உள்ள மியன்மார் ராணுவம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது.
வரும் ஏப்ரல் 17ஆம் தேதியிலிருந்து அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் மியன்மாருக்குள் அனுமதிக்கப்படுவர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மார் கடந்த 2020 மார்ச் மாதம் தனது எல்லைகளை மூடியது. அப்போதுதான் கொள்ளைநோய் பரவத் தொடங்கியது. கிருமிப் பரவலைக் கட்டுப் படுத்தும் முயற்சியாக அப்போது எல்லைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்த ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. ராணுவம் அந்தப் போராட்டங்களை இரும்புக்கரத்துடன் நசுக்கியது.
இதில் பல ஆயிரம் பேர் உயிரிழந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவத்தின் அட்டுழியத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு பல்வேறு தடை களையும் விதித்தன. இதனால் மியன்மார் தனிமைப்படுத்தப்பட்டது. சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டதால் நாட்டின் பொருளியல் அடிமட்டத்துக்குச் சரிந்தது.
இந்தச் சூழலில் வெளிநாட்டுப் பயணிளை நாட்டுக்குள் அனுமதிக்கும் முடிவை ராணுவ அரசாங்கம் எடுத்துள்ளது.
"ஏப்ரல் 17 முதல் அனைத்துலக விமானங் களுக்கு எல்லைகள் திறக்கப்படும்," என்று தேசிய கொவிட்-19 நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு, சிகிச்சை நிலையம் நேற்று அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
நாட்டில் கிருமித்தொற்று குறைந்து வருவதாகவும் அது கூறியது.
"சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத் தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மியன் மாருக்கு பயணிகள் சுமுகமாக வந்து செல்லவும் இந்த ஏற்பாடு உதவும்," என்று நிலையம் குறிப் பிட்டது.
வருகையாளர்கள், இரண்டு பிசிஆர் பரி சோதனைகளைச் செய்து ஒருவார காலம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக் கின்றன.
கடந்த ஆண்டு மியன்மாரில் தொற்றுச் சம்பவங்கள் உச்சகட்டத்தில் இருந்தபோது தினசரி 40,000 வரை பாதிக்கப்பட்டனர். இதுவரை 20,000 பேர் அந்நாட்டில் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

