உக்ரேனில் உயிருடற் சேதம் கூடுகிறது

உக்ரேனில் உயிருடற் சேதம் கூடுகிறது

2 mins read

உக்­ரே­னில் ரஷ்யா தாக்­கு­தலை அதி­கப்­ப­டுத்தி இருக்­கிறது.

உக்­ரே­னியப் படை­கள் கடும் எதிர்ப்பைக் கொடுத்து வரு­கின்­றன. இத­னால் அந்த நாட்­டில் மனி­தாபிமானப் பிரச்­சினை விஸ்­வ­ரூ­பம் எடுப்­ப­தாக தக­வல்­கள் கூறின.

முற்­று­கை­யி­டப்­பட்டு உள்ள துறை­முக நக­ரான மரி­ய­போ­லில் நுழைய ரஷ்யா தாக்­கு­தலை வேகப்­படுத்­தி­யது. அதே­வே­ளை­யில், மேற்கு உக்­ரே­னில் ரஷ்யா பாய்ச்சிய ஏவு­க­ணை­கள் வெடித்து பாதாள ராணுவ வெடி­ம­ருந்துக் கிடங்கு நாச­மா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உக்­ரேன் முழு­வ­துமே போர் மூர்க்­க­மடைந்­து­விட்­ட­தா­க­வும் அந்த நாட்­டில் உயி­ரு­டற்சேதம் அதி­க­ரிப்­ப­தால் மனி­தா­பி­மானப் பிரச்­சி­னைகள் மோச­ம­டை­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­வித்­தன.

மைகோ­லாய் என்ற நக­ரில் எறி­படைகளைக் கொண்டு வெள்­ளிக்­கி­ழமை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்­பட்ட படை­வீ­ரர்­கள் கொல்லப்பட்டனர். அந்த நகரில் ரஷ்யா நேற்றும் தொடர்ந்து விமானத் தாக்குதல் நடத்தியது.

இத­னை­ய­டுத்து, உக்­ரே­னிய அதி­பர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்தி­விட்டு அர­ச­தந்­திர தீர்வை எட்ட ஆத­ரவு தரும்­படி ரஷ்­யா­வுக்கு நேரடி­யாகக் கோரிக்கை விடுத்­தார்.

அதோடு, அவர் ரஷ்­யாவைக் கடுமை­யாக எச்­ச­ரித்­தார். உக்­ரேன் போரில் 14,000 ரஷ்யப் படை­வீ­ரர்­கள் கொல்­லப்­பட்­டு­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், மரி­ய­போல் நகரில் ரஷ்யப் படை­வீ­ரர்­கள் நடத்­திய தாக்­கு­த­லில் ஐரோப்­பா­வின் ஆகப் பெரிய இரும்பு எஃகு ஆலை­களில் ஒன்று படு­மோ­ச­மாக சேத­மடைந்­து­விட்­டது என்று அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அந்த ஆலை தீப்­பற்றி எரி­வதைக் காட்­டும் காணொ­ளி­களை லிஸ்­சியா என்ற உக்­ரே­னிய நாடாளு­மன்ற உறுப்­பி­னர் சமூக ஊட­கத்­தில் பதி­வேற்­றி­னார்.

இத­னி­டையே, கருங்­க­டல், காஸ்பி­யன் கட­லில் நிறுத்­தப்­பட்டு இருக்கும் கப்­பல்­களில் இருந்து உக்­ரேனை நோக்கி ரஷ்யா குருஸ் ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சி­யது.

கிரைமியா ஆகா­ய­வெ­ளி­யில் இருந்­தும் ரஷ்யப் படை­கள் உக்­ரேனுக்­குள் ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்சி­ய­தாக ரஷ்யத் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

உக்­ரே­னிய ராணுவ நிலை­களைக் குறி­வைத்து சனிக்­கி­ழமை இர­வும் பிறகு நேற்­றுக் காலை­யும் ரஷ்ய படை­கள் கின்ஸால் என்ற ஒலி­யை­விட வேக­மா­கப் பாயும் ஏவு­க­ணை­க­ளைக் கொண்டு தாக்­கி­ய­தாக மாஸ்கோ தற்­காப்பு அமைச்­சின் பேச்­சா­ளர் இகோர் கோனா­ஷென்­கோவ் கூறி­னார்.

உக்­ரே­னில் ரஷ்யப் படை­யெ­டுப்பு கார­ண­மாக ஆயி­ர­க்க­ணக்­கான மக்கள் கொல்­லப்­பட்டு இருக்­கி­றார்­கள். மூன்று மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் வேறு இடங்­க­ளுக்கு மாறி இருக்­கி­றார்­கள்.

உக்­ரேன் நில­வ­ரம் மோச­மாகி உல­கின் மாபெ­ரும் வல்­ல­ர­சு­க­ளான ரஷ்­யா­வுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யில் மோதல் ஏற்­பட்­டு­வி­ட­லாம் என்ற அச்­சம் அதி­க­மாகி வரு­கிறது.

"அமெ­ரிக்கா, உக்­ரேனைப் பயன்­படுத்தி ரஷ்­யாவை மிரட்டி வரு­கிறது. உக்­ரே­னில் ரஷ்ய மொழி பேசும் மக்­கள் படு­கொலை செய்­யப்­ப­டு­கி­றார்­கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டி இருக்­கிறது.

"இத­னால் உக்­ரே­னில் சிறப்பு ராணுவ நட­வ­டிக்கை தேவைப்­ப­டு­கிறது," என்று ரஷ்ய அதி­பர் புட்­டின் தெரி­வித்து வரு­கி­றார்.

உக்­ரே­னில் ராணு­வத் தாக்கு தலைக் கண்­டித்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் ரஷ்­யாவுக்கு எதி­ராக கடு­மை­யான பொரு­ளி­யல் தடை­களை விதித்து வரு­கின்­றன.

மேலும் செய்தி பக்கம் 8ல்