கேரளா: காற்பந்து இருக்கை சரிந்து 200 பேர் காயம்

கேரளா: காற்பந்து இருக்கை சரிந்து 200 பேர் காயம்

1 mins read
c520f0e4-0b1e-4271-95b3-8d39913e4d9e
கேரளாவின் வடக்கு வட்டாரத்தில் காற்பந்து விளையாட்டு பிரபலமானது. திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்த விளையாட்டைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தபோது இருக்கைகள் சரிந்து விழுந்துவிட்டதாக தகவல்கள் தெரிவித்தன. படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலப்புரம் காளிகாவ் நகரில் முக்கியமான இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையில் நடந்த காற்பந்து போட்டியின்போது மூங்கில், மரப்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு இருந்த இருக்கைகள் திடீரென சரிந்து விழுந்ததில் ரசிகர்கள் 200 பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் 10 பேருக்குக் கடும் காயம் ஏற்பட்டதாகவும் பலர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தகவல்கள் குறிப்பிட்டன.