மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பில் போயிங் 737 ரக விமானங்கள்: இந்தியா

மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பில் போயிங் 737 ரக விமானங்கள்: இந்தியா

1 mins read
76c37248-9d99-424e-8192-b6e1b77ba0bf
சீனாவின் வூஹான் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம், நாட்டில் சேவையில் உள்ள போயிங் 737 ரக விமானங்களை 'மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பில்' வைத்துள்ளது.

விமானப் பயண நடைமுறைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்களை தான் அனுப்பியுள்ளதாக இயக்ககம் கூறியது.

சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம், திங்கட்கிழமை (மார்ச் 21) தென்சீனாவில் விழுந்து நொறுங்கியது. அதில் 132 பேர் பயணம் செய்தனர்.

"விமானப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். நிலவரத்தை நாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம்.

"இந்நிலையில், போயிங் 737 ரக விமானங்களை நாங்கள் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைத்துள்ளோம்," என்று இயக்ககத்தின் தலைவர் அருண் குமார் கூறினார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களிடம் போயிங் 737 ரக விமானங்கள் உள்ளன.