புதிதாக 13,166 பேருக்கு கொவிட்-19

புதிதாக 13,166 பேருக்கு கொவிட்-19

1 mins read
474a2fee-742d-4559-b060-45b4c569ff7c
லிட்டில் இந்தியாவில் வாடிக்கையாளர் கூட்டம். படம்: திமத்தி டேவிட் -

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) புதிதாக 13,166 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பதிவான 7,538 தொற்று பாதிப்பைவிட இது அதிகம்.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 15) ஒப்பிடுகையில் இது குறைவு. அப்போது 15,851 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொவிட்-19 தொற்று எண்ணிக்கை பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் அதிகமாக பதிவாகி வருகிறது. வாரயிறுதிகளில் பல மருந்தகங்கள் மூடப்பட்டிருப்பதால், பலரும் காத்திருந்து திங்கட்கிழமைகளில் மருத்துவரைப் பார்க்கின்றனர். அன்றைய தினம் பதிவாகும் தொற்று செவ்வாய்க்கிழமை கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் தங்கி 1,023 பேர் கொவிட்-19க்கு சிகிச்சை பெற்றனர். திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 1,062ஆக இருந்தது.

கொவிட்-19க்கு மேலும் அறுவர் உயிரிழந்தனர்.

வாராந்திர கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 21வது நாளாக 1க்குக் கீழ் பதிவாகியது. அது 0.74ஆக உள்ளது.