உக்ரேன் விவகாரத்தில் இந்திய நிலைப்பாட்டை விமர்சித்த பைடன்

உக்ரேன் விவகாரத்தில் இந்திய நிலைப்பாட்டை விமர்சித்த பைடன்

1 mins read

ரஷ்­யா­வு­ட­னும் மேற்­கத்­திய நாடு

­க­ளு­ட­னும் இந்­தியா தனது உற­வைத் தொடர்ந்து வரும் நிலை­யில், உக்­ரேன் மீதான ரஷ்­யப் படை­யெ­டுப்பு தொடர்­பி­லான இந்­தி­யா­வின் நிலைப்­பாட்டை அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் விமர்­சித்­துள்­ளார்.

நான்கு நாடு­கள் கொண்ட குழு அமைப்­பில் அமெ­ரிக்கா, ஜப்­பான், இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­கள் இடம்­பெற்று உள்­ளன. உக்­ரேன் மீது படை­யெ­டுத்த ரஷ்­யா­வைக் கண்­டிக்­கும் வித­மாக இந்­தியாவைத் தவிர மற்ற மூன்று நாடு­களும் ரஷ்யா மீது பொரு­ளி­யல் தடை­களை அறி­வித்­தன.

ஆனால், இந்­தியா அப்­படி எது­வும் செய்­ய­வில்லை. உக்­ரே­னில் வன்­செ­யல் முடி­வுக்கு வர­வேண்­டும் என்று கூறிய இந்­தியா, படை­யெ­டுப்­பைக் கண்­டிக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் திங்­கள்­கி­ழமை நடை­பெற்ற வர்த்­த­கக் கருத்­த­ரங்கு ஒன்­றில் பங்­கேற்­றுப் பேசிய அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் பெய­ரைக் குறிப்­பி­டா­மல், "அவ­ரது படை­யெ­டுப்­புக்கு எதி­ராக நேட்­டோ­வும் பசி­பிக் நாடு­களும் ஒரு­மித்த நிலைப்­பாட்டை எடுத்­துள்­ளன. நான்கு நாடு­கள் குழு­வில் இடம்­பெற்­றுள்ள நாடு­களில் இந்­தி­யா­வின் நிலைப்­பாடு சற்று உறுதி­ யற்­ற­தாக உள்­ளது," என்­றார்.

இந்­நி­லை­யில், உக்­ரேன் மீது ஆபத்­தான ரசா­யன ஆயு­தங்­களை பயன்­ப­டுத்­து­வது பற்றி மாஸ்கோ பரி­சீ­லித்து வரு­வ­தாக திரு பைடன் எச்­ச­ரித்­துள்­ளார். ஆயி­னும் அது குறித்த ஆதா­ரம் எதை­யும் அவர் வெளி­யி­ட­வில்லை.