வேலையிடப் பாரபட்ச போக்கு குறைந்தது

வேலையிடப் பாரபட்ச போக்கு குறைந்தது

2 mins read

சிங்­கப்­பூ­ரில் 2018ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­கை­யில், வேலை­யி­டத்­தி­லும் வேலை தேடும்போதும் உணரப்பட்ட பார­பட்­சம் இப்­போது குறைந்து உள்ளதாக சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வாசி­களும் தெரி­வித்தனர்.

வேலை­யி­டத்­தில் பார­பட்­சம் இருப்­ப­தாக தெரி­வித்த இந்த ஊழி­யர்­க­ளின் விகி­தம் 2018ல் 24% ஆக இருந்­தது. சென்ற ஆண்­டில் அது 8% ஆகக் குறைந்­து­விட்­டது.

மனி­த­வள அமைச்சு நடத்­திய ஆய்வு ஒன்­றின் மூலம் இந்த நில­வரம் தெரி­ய­வ­ரு­கிறது.

வேலை தேடும்­போது பார­பட்சப் போக்கு இருப்­ப­தாகக் கூறிய ஊழி­யர்­க­ளின் விகி­தம் 43%லிருந்து 25% ஆகக் குறைந்­து­விட்­டது.

மனி­த­வள அமைச்சு சென்ற செப்­டம்­பர் முதல் நவம்­பர் வரை நடத்­திய அந்த ஆய்­வில் ஏறத்­தாழ 3,000 பேர் கலந்­து­கொண்டு பல கேள்­வி­க­ளுக்­கும் இணை­யம், அஞ்சல், மின்­னஞ்­சல், தெலைப்­பிரதி வழி­ பதில்­க­ளைக் கூறினர்.

வேலை தேடும்போதும் வேலை­ இடத்­தி­லும் வய­து­தான் பொது­வான பார­பட்­ச­மாக இருக்­கிறது.

வேலை­யி­டத்­தில் பார­பட்­சம் அனு­ப­வித்த ஐவ­ரில் நால்­வர் அச்சம் கார­ண­மாக அதுபற்றி வெளியே சொல்­லா­மல் அமைதி காத்­து­விட்­ட­னர். மற்­ற­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் தங்­கள் நிறு­வ­னத்­தி­டம் அல்­லது தொழிற்­சங்­கத்­தி­டம் உதவி நாடி­னர். 16% தங்­கள் குடும்­பத்­தில் இருந்து சாதா­ரண முறை­யில் உதவியை நாடி­னார்­கள். 5%க்கும் குறை­வா­ன­வர்­கள் முத்­தரப்பு அமைப்­பு­களை நாடி­னர்.

கர்ப்பம் அடிப்­ப­டை­யி­லான பார­பட்­சம் ஆக அதி­க­மா­கக் குறைந்து­விட்­டது.

இத­னி­டையே, இது பற்றி நேற்று விளக்­கம் அளித்த மனி­த­வள அமைச்­சின் வேலை­யிட கொள்கை, உத்­திப் பிரி­வின் வட்­டார இயக்­கு­நர் லீ சுங் வெய், பார­பட்ச போக்கு குறைந்துள்ளதற்கு, நியா­ய­மான வேலை­யிட நடை­மு­றை­கள் பற்­றிய புரிந்­து­ணர்வு அதி­க­ரித்­துள்­ளதும் தொழி­லா­ளர் சந்தை இறுக்­க­மாக இருப்பதும் காரணங்கள் என்றார்.

வேலை தேடும்­போது மன­நல நில­வ­ரம் அடிப்­படை­யில் பார­பட்­சம் எப்­படி காட்­டப்­ப­டு­கிறது என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள ஏது­வாக புதிய ஆய்­வில் ஒரு பிரிவு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. வேலை தேடி­யோ­ரில் மன நலன்­ தொ­ட­ர்பில் தாங்­கள் பார­பட்­ச­மாக நடத்­தப்­பட்­ட­தாகத் தெரி­வித்­த­வர்­கள் 3%க்கும் குறை­வு.