கொவிட்-19 சூழல், நிலவரங்கள் பற்றி பிரதமர் இன்று உரை

கொவிட்-19 சூழல், நிலவரங்கள் பற்றி பிரதமர் இன்று உரை

1 mins read

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சூழ்­நிலை பற்­றிய புதிய நில­வ­ரங்­களை பிர­த­மர் லீ சியன் லூங் இன்று முற்­ப­கல் 11 மணிக்குத் தொலைக் ­காட்சி வழி தெரி­யப்­ப­டுத்­து­வார். திரு லீ நேற்று இதனை ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.

''ஓமிக்­ரான் தொற்று குறை­கிறது. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சூழ்­நிலை மேம்­ப­டு­கிறது.

"கொரோனா கிரு­மி­யு­டன் சேர்ந்து வாழ்­வ­தைப் படிப்­ப­டி­யாக சிங்­கப்­பூ­ரர்­கள் கற்­றுக்­கொள்­கிறார்­கள்.

''சிங்­கப்­பூர் சூழ்­நிலை பற்­றி­யும் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் நாளை (இன்று) முற்­பகல் 11 மணிக்கு நேர­டி­யாக நான் உரை­யாற்றுவேன்,'' என்­று திரு லீ நேற்று கூறினார். இங்கு 2020ல் கொரோனா கிருமி தலை­காட்­டியது முதல் திரு லீ இத்­து­டன் ஒன்ப தாவது முறை­யாக கொவிட்-19 தொடர்­பில் உரை­யாற்­று­கி­றார்.

பிர­த­மர் உரையை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் இணை­யத்தளம், ஃபேஸ்புக் பக்­கம், யூடி­யூப்­ ஆகிய வற்றில் நேரடி­யா­கக் காண­லாம். பிர­த­மரின் ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் மீடி­யா­கார்ப் ஒளி­வழிகளி­லும் பொது­மக்­கள் பிர­த­ம­ரின் உரையை நேர­டி­யா­கக் காண­மு­டி­யும்.