இந்திய அரசாங்கம் கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் அனைத்தையும் மார்ச் 31 முதல் விலக்கிக் கொள்வதாக அறிவித்து உள்ளது.
எல்லா நாடுகளையும்போல இந்தியாவையும் கொரோனா கிருமித்தொற்று பாடாய்ப்படுத்திவிட்டது. நாள் ஒன்றுக்கு 300,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படையும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து இருந்தது. மூன்றுகட்ட கிருமிப் பரவலில் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 500,000க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
இருப்பினும் கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் தொற்றுப் பரவல் கணிசமாகக் குறைந்து வருகிறது. அதற்குத் தடுப்பூசி முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
தினமும் தொற்றால் பாதிக்கப்
படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2,000க்குக் கீழ் பதிவாகி வருகிறது. புதன்கிழமை 1,778 பேரும் நேற்று 1,938 பேரும் பாதிக்கப்பட்டனர். 67 பேர் உயிரிழந்தனர்.
கிருமிப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக அனைத்துலக எல்லைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை ஒவ்வொரு மாதமும் இந்திய அரசாங்கம் வெளியிட்டு வந்தது. அதன் தொடர்ச்சி யாக, இந்த மாத அறிவிப்புக்காக நிலைமையை மறுபரிசீலனை செய்த அரசாங்கம், கட்டுப்பாடுகள் எல்லா வற்றையும் விலக்கிக்கொள்ள முடிவு செய்தது.
இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கொவிட்-19 தொடர்பில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 31 முதல் முற்றாகத் தளர்த்தப்படுவதாகவும்
ஏப்ரல் 1 முதல் எல்லாம் வழக்க
நிலைக்கு திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாநில முதல்வர்களை அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். குறிப்பாக, சமூக, பொருளியல் மீட்பு நடவடிக்கைகளை மீண்டும் முடுக்கிவிடுமாறு அவர் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமே நிர்வகித்து வந்தது. இனி கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று அந்த ஆணையமும் உள்துறை அமைச்சும் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இருப்பினும் பொது
வெளியில் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் தளர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசுகள் தங்களது நிலைமைக்கேற்ப இதில் மாற்றம் செய்துகொள்ளலாம் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படு வதால் ஏப்ரல் 1 முதல் பேருந்துகள், ரயில்களில் முழு அளவில் பயணி கள் அனுமதிக்கப்படுவார்கள். திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள் வோருக்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டு, எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக் கூட்டங்கள், திரையரங்குகளிலும் முழுமையான எண்ணிக்கையில் மக்கள் அனு மதிக்கப்படுவர்.
அதேநேரம் எந்த மாநிலத்திலா வது திடீர் என்று தொற்றுப் பரவல் அதிகரித்தால் கட்டுப்பாடுகளை விதிக்கும் பொறுப்பு அந்தந்த மாநில அரசுகளுக்குத் தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவிலும் இயல்பு நிலை முற்றாக மீளக்கூடும்.

