பைடன்: ஜி20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்

பைடன்: ஜி20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்

2 mins read

ரஷ்­யாவை ஜி20 அமைப்­பி­லி­ருந்து வெளி­யேற்ற வேண்­டும் என்று ஜி20 நாடு­க­ளி­டம் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார். உக்­ரே­னுக்கு எதி­ராக ரஷ்யா தொடுத்­துள்ள போரில், பேர­ழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஆயு­தங்­களை திரு விளா­டி­மிர் புட்­டின் பயன்­படுத்­த­லாம் என்ற எச்­ச­ரிக்­கை­யை­யும் அவர் நேற்று முன்­தி­னம் பிரஸ்­சல்­சில் நடை­பெற்ற மாநாடு ஒன்­றில் விடுத்­தார்.

மேலை­நா­டு­க­ளு­டன்­தான் சீனா­வின் பொரு­ளி­யல் எதிர்­கா­லம் என்­பதை சீனா அறிந்­தி­ருப்­ப­தா­க­வும் திரு பைடன் குறிப்­பிட்­டார்.

இத­னால், உக்­ரே­னுக்கு எதி­ராக போர் தொடுத்­துள்ள ரஷ்­யா­வின் பக்­கம் சீனா சாய்ந்­தால், அது வருத்­தத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய நிலை­மை­யா­கி­வி­டும் என்ற எச்­ச­ரிக்­கை­யை­யும் திரு பைடன் சீனத் தலை­வ­ரான ஸி ஜின்­பிங்­குக்கு விடுத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

"நான் மிரட்­ட­வில்லை. ஆனால் தெளி­வா­கக் கூறி­விட்­டேன். ரஷ்­யா­வுக்கு உத­வு­வ­தன் விளை­வு­களை அவர் புரிந்­து­கொண்­டி­ருப்­பதைத்­தான் நான் உறு­திப்­ப­டுத்தி­னேன்," என்று நேற்று திரு ஸியு­டன் தொலை­பே­சி­வழி தொடர்­பு­கொண்டு பேசி­ய­து குறித்­துத் தெரி­வித்­தார் அவர்.

புட்­டின் ரசா­யன ஆயு­தத்­தைப் பயன்­ப­டுத்­தி­னால் அதற்கு நேட்டோ அமைப்பு நாடு­கள் தக்க எதிர்­ந­ட­வ­டிக்கை எடுக்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

வரும் ஆண்­டு­களில் சுமார் 100,000 உக்­ரே­னிய அக­தி­களை வர­வேற்க அமெ­ரிக்கா தயா­ராக உள்­ள­தா­க­வும் திரு பைடன் அறி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, உக்­ரே­னி­யப் படை­கள் உக்­கி­ர­மா­கத் திருப்­பித் தாக்­கும் காட்­சி­கள் வெளி­யா­கி­யுள்­ளன. உக்­ரேன் தலை­ந­கர் கியவ்­வுக்கு மேற்கே உள்ள நக­ரங்­களை ரஷ்­யப் படை­க­ளி­ட­மிருந்து உக்­ரே­னி­யப் படை­கள் மீட்­டி­ருக்­க­லாம் என்று பிரிட்­டன் நேற்று தெரி­வித்­தது.

போர்த் தாக்­கு­தல் தொடங்கி ஒரு மாத­மா­கி­விட்ட நிலை­யி­லும் உக்­ரே­னில் பெரும் நகர் எதை­யும் ரஷ்­யப் படை­கள் கைப்­பற்­றி­ய­தாகத் தெரி­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

உக்­ரே­னிய நக­ரங்­கள் மீது குண்டு வீசு­வ­தும் அவற்­றைச் சுற்றி வளைப்­ப­து­மா­கவே ரஷ்­யப் படை­கள் இந்த ஒரு மாதத்­தைத் தள்­ளு­கின்­றன.

கூடு­தல் செய்தி - பக்­கம் 9