தேசிய சேவை தொடங்கி இவ்வாண்டுடன் 55 ஆண்டுகள் ஆகின்றன.
இதை ஒட்டி சிங்கப்பூர்
ஆயுதப்படைகள், உள்துறைக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த கடந்தகால, தற்போதைய ஆயத்தநிலை தேசிய சேவை யாளர்களுக்கு $100 மதிப்புள்ள மின்னிலக்க வழங்கீடுகள் வழங்கப்படும்.
அதோடு ஓராண்டுக்கு 'சாஃப்ரா' அல்லது 'ஹோம்டீம்என்எஸ்' இலவச உறுப்
பியத்தையும் அவர்கள் பெறுவர்.
என்எஸ்55 அங்கீகாரத் திட்டம் என்ற வடிவில் அவர்களுக்கு இவை வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரைத் தற்காப்பதிலும் சிங்கப்பூரர்கள் தங்கள் வாழ்வைத் தொடர்வதை உறுதிப்படுத்து
வதிலும் தேசிய சேவையாளர்கள் ஆற்றும் உயிர்நாடியான பணிக்கு நன்றிகூறும் வகையில் இந்தத் திட்டம் இடம்பெறுகிறது.
தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று இந்த விவரங்களை அறிவித்தார். ஏறக்குறைய ஒரு மில்லியன் தேசிய சேவையாளர்
களுக்கு ஜூன் நடுப்பகுதி முதல் கடிதம் அனுப்பப்படும். அதில் இவை சம்பந்தமான பல விவரங்கள் இருக்கும்.
மாஜு முகாமில் நடந்த படைத் திரட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு திரு ஸாக்கி வருகையளித்தார். அதையொட்டி அவர் செய்தியாளர்
களிடம் பேசினார்.
அப்போது அவர், என்எஸ்55 ஓராண்டு காலம் இயக்கம் தொடங்குவது பற்றி குறிப்பிட்டார்.
உக்ரேனில் ரஷ்யா படையெடுத்து இருக்கும் நிலையில், தேசிய சேவை எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அவர் விளக்கிக் கூறினார்.
''உக்ரேனியர்களைப் பாருங்கள், ரஷ்யப் படையினருக்கு அவர்கள் கொடுக்கும் எதிர்ப்பை கவனியுங்கள். இது சிங்கப்பூரர்களுக்கும் ஒரு பாடம்,'' என்று அமைச்சர் தெரிவித்தார்.
"இத்தகைய ஒரு மனநிலையை ஒரேநாளில் ஏற்படுத்திவிட முடியாது.
"தேசிய சேவை தொடங்கப்பட்டு 55 ஆண்டுகள் ஆகின்றன. நேரம் வரும்போது, தேவை ஏற்
படும்போது சிங்கப்பூரர்கள் தங்கள் நாட்டைத் தற்காக்க ஆயத்தமாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று திரு ஸாக்கி கூறினார்.