'உடலின் நடுப்பகுதியில் சுட அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது'

'உடலின் நடுப்பகுதியில் சுட அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது'

2 mins read

அண்­மைய சில நாள்­க­ளாக போதைப் புழங்­கி­க­ளு­டன் தொடர்­பு­டைய வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன. அவர்­க­ளால் யாரும் மோச­மா­கக் காய­ம­டை­

யா­மல் இருக்க, அவர்­க­ளுக்கு எதி­ராக மிகக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­ட­தாக போதைப்­பொ­ருள்

ஒழிப்­புப் பிரிவு தெரி­வித்­தது.

இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று புளோக் 33 பெண்­ட­மி­யர் சாலை­யில் கத்­தியை ஏந்­திக்­கொண்டு காவல்­து­றை­யி­ன­ரைத் தாக்க அவர்­களை நோக்கி விரைந்த 64 வயது இங் எங் குயியை காவல்­துறை அதி­காரி சுட்­டுக்­கொன்­றார்.

துப்­பாக்­கி­யால் சுடு­வ­தற்கு முன்பு டேசர் சாத­னத்தை அதி­கா­ரி­கள் முத­லில் பயன்­ப­டுத்­தி­னர். ஆனால் அதற்­கும் அடங்­கா­மல் தொடர்ந்து காவல்­துறை அதி­கா­ரி­ களை நோக்­கிச் சென்ற இங், துப்­பாக்­கி­யால் சுடப்­பட்­டார். அவ­ரது நெஞ்­சுப் பகு­தி­யில் சுடப்­பட்­டது. அதி­கா­ரி­கள் அவ்­வாறு நடந்­து­கொண்­ட­தற்­கான கார­ணம் பல­ருக்­குப் புரிந்­துள்­ள­போ­தி­லும் உயிர் போகும் அள­வுக்­குத் துப்­பாக்­கி­யால் சுடா­மல் வெறும் காயத்தை ஏற்­

ப­டுத்த காவல்­து­றை­யி­னர் ஏன் சுட­வில்லை என்று சிலர் கேள்வி எழுப்பி­யுள்­ளதை சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் சுட்­டி­னார்.

"யாருக்­கும் மிகக் கடு­மை­யான காயங்­கள் அல்­லது மர­ணம் ஏற்­

ப­டா­மல் இருக்க உயிருக்கு மிரட்­டல் விடுப்­ப­வ­ரு­டைய உட­லின் நடுப்­ப­கு­தி­யில் துப்­பாக்­கி­யால் சுட காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது. அவ்­வாறு செய்­வ­தன் மூலம் குறி தப்பு­ வ­தற்­கான சாத்­தி­யங்­கள் மிக­வும் குறைவு. அத்­து­டன் அப்­பாவி வழிப்­போக்­கர்­கள் காயம் அடை­வதை இது தடுக்­கிறது," என்று அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

பெண்­ட­மி­யர் சாலை­யில் நிகழ்ந்த சம்­ப­வத்­தில் கத்­தி­யைக் கீழே போடும்­படி காவல்­துறை அதி­கா­ரி­கள் உத்­த­ர­விட்­டும் அதைப் புறக்­க­ணித்து அந்த ஆட­வர் தொடர்ந்து அதி­கா­ரி­களை நோக்கி விரைந்­த­தாக திரு சண்­மு­கம் கூறி­னார்.

"அந்த ஆட­வர் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வால் தேடப்­பட்­ட­வர். அவர் ஒரு போதைப் புழங்கி. போதைப்­பொ­ருள் உட்­கொள்ள பயன்­ப­டுத்­தப்­படும் கருவி என்று நம்­பப்­படும் பொருள் ஒன்று அவ­ரது வீட்­டில் கண்டெடுக்கப் பட்டது. அது­மட்­டு­மல்­லாது,

பல்­வேறு குற்­றங்­கள் தொடர்­பா­க­வும் அவ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. வேண்­டு­மென்றே காவல்­துறை அதி­கா­ரிக்­குக் காயம் விளை­வித்­த­தும் அதில் அடங்­கும்,"

என்­றார் திரு சண்­மு­கம்.