இந்தியா: ஈராண்டுகளுக்குப் பின் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் தொடங்கின

இந்தியா: ஈராண்டுகளுக்குப் பின் வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகள் தொடங்கின

1 mins read
903ada48-8775-4e5d-a4a9-9fa2e429a9b1
-
Google News Preferred Icon

இந்தியாவில் கொவிட்-19 காரணமாக ஈராண்டு காலம் முடங்கி இருந்த அனைத்துலக விமானச் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) மீண்டும் தொடங்கின. வழக்கமான விமானச் சேவைகளைத் தொடங்க ஏதுவாக விமான நிறுவனங்களும் விமான நிலையங்களும் ஆயத்தமாயின.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய சுற்றுலாத்துறை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கநிலைக்குத் திரும்பி வருகிறது.

கோடைக்காலத்தில் 40 நாடுகளைச் சேர்ந்த 60 விமான நிறுவனங்கள் இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்து 1,783 சேவைகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனர் அலுவலகம் தெரிவித்தது.

விமானச் சேவைகளை அந்நிறுவனங்கள் மார்ச் 27 முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை வழங்கும். இந்தியாவைச் சேர்ந்த ஆறு விமான நிறுவனங்கள் வாரம் ஒன்றுக்கு மொத்தம் 1,466 அனைத்துலக சேவைகளை வழங்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.