ஜூன் வரை தீர்வை சலுகை நீடிப்பு

கட்­டு­மா­னம், கப்­பல் பட்­டறை, பதனீட்டுத் தொழில் துறை­யில் வேலை பார்க்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு முத­லா­ளி­கள் செலுத்த வேண்­டிய தீர்வையில் கொடுக்கப்படும் தள்ளுபடி மேலும் மூன்று மாதத்­திற்கு நீட்­டிக்­கப்­படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்­தத் தள்­ளு­படி ஏப்­ரல், மே மாதத்­திற்கு $250 ஆக­வும் ஜூன் மாதத்­திற்கு $200 ஆக­வும் இருக்கும். தேசிய வளர்ச்சி அமைச்­சும் மனி­த­வள அமைச்­சும் நேற்று இதனை அறி­வித்­தன.

இந்­தத் தொழில்­து­றை­களில் ஊழி­யர் பற்­றாக்­குறை தொடர்ந்து நில­வு­கிறது. செல­வும் அதி­க­ரித்து இருக்­கிறது. இந்­தச் சுமை­களைப் போக்க உத­வும் வகை­யில் பல்வேறு ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள் நீட்­டிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

இதன் ஒரு பகு­தி­யாக தீர்­வைத் தள்­ளு­ப­டி­யும் நீட்­டிக்­கப்­ப­டு­கிறது என்று இந்த அமைச்­சு­கள் குறிப்­பிட்­டன. இத்­த­கைய ஆத­ரவு திட்­டங்­கள் இந்த மாத முடி­வில் முடி­வடைய இருந்­தன.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் வைத்­தி­ருக்­கும் முத­லா­ளி­கள் செலுத்த வேண்­டிய தீர்­வை­யில் தள்­ளு­படி சலுகை 2020ல் நடப்­புக்கு வந்­தது.

கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்ட சவால்­க­ளைச் சமா­ளிக்­க­வும் நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வ­வும் தீர்வை ரத்து அம­லா­னது.

அது தொடர்ந்து நீட்­டிக்­கப்­பட்டு வரு­கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்­திற்கு முத­லா­ளி­கள் செலுத்த வேண்­டிய தீர்­வை­யில் அளிக்­கப்படும் தள்­ளு­படி கொஞ்சம் குறை­வாக இருக்­கும்.

இந்­தத் துறை­களில் ஊழி­யர் நில­வ­ரம் மேம்­பட்டு வரு­வதே இதற்கான கார­ணம் என்று கூட்­டறிக்­கை­யில் அமைச்­சு­கள் தெரி­வித்­தன. அதற்­கேற்ப மனி­த­வள செல­வும் மித­மா­ன­தாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சூழ்­நி­லையை அர­சாங்­கம் தொடர்ந்து கவ­னிக்­கும். வரும் ஜூன் மாதம் மேலும் தள்­ளு­ப­டியை நீட்­டிப்­பதா என்­பது பற்றி அது முடிவு செய்­யும் என்று கூட்டறிக்கை தெரி­வித்­தது. வெளி­நாட்டு ஊழியர் தீர்வை தள்­ளு­படி ஒரு தற்­கா­லிக ஆத­ர­வாக கொடுக்­கப்­ப­டு­கிறது.

நிறு­வ­னங்­கள் நீண்­ட­கால உற்­பத்­தித்திறன் மேம்­பா­டு­களில் கவனம் செலுத்­தும்­படி ஊக்­க­மூட்­டப்­ப­டு­கின்­றன என்­றும் கூட்ட றிக்கை தெரி­வித்­தது.

மனி­த­வள ஆற்­றலை குறைத்­துக்­கொண்டு எதிர்­கா­லத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய ஊழி­யர் பற்­றாக்­குறைக்கு எதி­ராக தங்­க­ளைத் தற்­காத்­துக்­கொள்­ளும் வகை­யில் நிறு­வ­னங்­கள் ஆயத்­த­மாக வேண்­டும் என்­றும் அது குறிப்­பிட்­டது.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வடிக்­கை­கள்) சட்­டத்­திற்­குட்­பட்ட ஓர் அம்­ச­மும் நீட்­டிக்­கப்­படும் என்று கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

கொவிட்-19 தொடர்­பான கார­ணங்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய வெளி­நாட்டு ஊழி­யர் சம்­பள உயர்வை கவ­னத்­தில் கொள்­ளும் வகை­யில் ஒப்­பந்த தொகை­யைச் சரி­செய்ய ஏது­வாக மதிப்­பீட்­டா­ளர் ஒரு­வ­ரி­டம் இருந்து அதி­கா­ர­பூர்­வ­மான உறு­தி­மொழி ஒன்றைக் குத்­த­கை­தா­ரர்­கள் பெறு­வ­தற்கு அந்த அம்சம் அனு­மதி அளிக்­கிறது.

இந்­தச் சலு­கைக்­கா­லம் இம்­மா­தத்­து­டன் முடி­வ­டைய இருந்­தது.

இது மேலும் மூன்று மாதங்­களுக்கு-அதா­வது ஜூன் 30ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

கட்டுமானம், கப்பல் பட்டறை, பதனீட்டுத் துறை வெளிநாட்டு ஊழியருக்குத் தீர்வை செலுத்த வேண்டாம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!